அத்தியாயம் - 31

4K 207 39
                                    

மனிதன் ஆசைபடுவதெல்லாம் அவன் வாழ்க்கையில் கிடைத்துவிடாது. கிடைத்ததை ஏற்று தன் வாழ்க்கையை நல்லப்படியாக அமைத்துக்கொள்ள மனிதனும் எண்ணுவதில்லை. ஆயிரம் கூச்சல்களும், குழப்பங்களும் கொண்ட இந்த வாழ்க்கையை மனிதனும் தன்னால் முடிந்த அளவு சிக்கல்கள் நிறைந்ததாக மாற்றிக்கொள்கிறான் அவனது வாயால்.

இரண்டு மனங்களும் ஒன்று சேர்ந்த பிறகு அங்கு பணத்திற்கு என்ன வேலை? காதலில் பணக்கணக்கு என்பது வேறு விதமாக கருதப்படும். அதை புரிந்துக்கொள்ளாமல் விதுலனும், சதன்யாவும் கிடைத்த வாழ்க்கையை தவறவிட்டுவிட்டுவிட்டார்கள். சதன்யாதான் பணத்திற்கு அதிகம் மதிப்பு கொடுத்தாள் என்றால் விதுலனாவது அவளுக்கு புரியவைத்திருக்கலாம். இவனும் அவள் முடிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒதுங்கிவிட இடையில் வந்தாள் இந்த இனியநிலா.

சிறுவயதில் இருந்து பிடிக்காத பெண்தான் என்றாலும் அவள் ஒரு பெண். அதை நினைத்தாவது இவன் தன் வாயையும், கையையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதையும் தவறவிட்டு இவனின் பெற்றோரின் சொல்லுக்காக இவனுடன் திருமண பந்தத்தில் இணைந்தவளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேதனைபடுத்திவிட்டு, இப்போ என்னமோ அவளை நினைத்து மனம் துடிக்கிறது என்று சொன்னால் இது எந்த ஊர் நியாயம். இதை கேட்போருக்கே கோபம் வரும் போது, சம்பந்தப்பட்டவள் இவனை சவித்து துப்பிவிடமாட்டாளா?

கண்டிப்பாக செய்வாள். ஆனால் இனியா ஒரு சைலன்ட் பாம் மாதிரி. வெளியே தெரியாமல் வெடித்து சிதற வைப்பதில் கைதேர்ந்தவள். அவள் மனதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைப்பதில் டாக்டரேட் பட்டம் பெற்றவள். விதுலன் இன்று உணர்வதை போல அவள் என்றோ உணர ஆரம்பித்துவிட்டாள். அந்த உணர்வு இல்லாமல் ஒரு பெண் ஒருவனுடன் ஒரே வீட்டில், ஒரே அறையில், ஒரே கட்டிலில் ஒன்டரை ஆண்டுகள் வாழ்ந்திருக்கமாட்டாளே.

இன்று இதுமாதிரியான வாழ்க்கை முறை சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் அப்படி இருப்பதில்லை. உலகமே நாகரிகத்தில் வளர்ந்தாலும் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் என்பதை விடாமல்பற்றிக்கொண்டு இருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

விழியோரம் காதல் கசியுதேDove le storie prendono vita. Scoprilo ora