அத்தியாயம் -29

3.3K 159 5
                                    

இரு பெண்களுக்கு நடுவே மத்தளம் போல ஆனது விதுலனின் நிலை. ஒருத்தி நெருங்கிவந்து இம்சை கொடுத்தாள், இன்னொருத்தி விலகி சென்று இம்சை கொடுத்தாள். நெருங்கிவந்தவ ஜம்மென்று காரில் ஏறி வீடு போய் சேர்ந்துவிடுவாள். அவளைப்பற்றி கவலையில்லை. விலகி சென்ற சைத்தான் எங்கு சென்றதோ? இன்னைக்கு என்னமாதிரியான அவதாரம் வைத்திருக்கோ? எங்கே போய் உட்கார்ந்துக்கொண்டு என்ன மாதிரி யோசிச்சுட்டு இருக்கோ? கடவுளே!' என்று தனக்குள் பேசிக்கொண்டவன் இனியாவை தேடி சென்றான்.

அந்த அப்பார்ட்மெண்டை சுற்றி தேடிவிட்டான் எங்கேயும் இல்லை. ட்ரெஸ்ஸிலும் தேடிவிட்டான் அங்கேயும் இல்லை. கையில் போனும் எடுத்து போகவில்லை, பணமும் இல்லை. எதுவுமே இல்லாமல் எங்கே சென்றிருப்பாள்? என்று பதட்டத்துடன் அவன் தேடி அலைய அவளோ இலக்கின்றி ரோட்டின் ஓரத்தில் இறங்கி நடந்தாள்.

எல்லா இடத்திலும் தேடிவிட்டு இவனும் ரோட்டிற்கு வந்தான் கண்ணை மறைக்கும் கோபத்துடன். வேகநடையில் சென்று அவளை பார்த்துவிட்டான். ஆனால் அவளோ ரோட்டின் ஓரத்தில் போவதாக நினைத்து நடுரோட்டுக்கே வந்துவிட்டாள்.

"சனியன்.. ரோட்டில் அடிபட்டு சாக நினைக்கிறது போல." என்றவன் அவள் அருகில் செல்லவும் ஒரு கார் அவளை உரச பார்க்கவும் சரியாக இருந்தது. பட்டென்று அவளை இழுத்தவன் "மூட்டாளடி நீ? சாகுறதா இருந்தா உன் அம்மாவீட்டுக்கு போய் சாகு. இப்போ உனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா என் அம்மாவும், அப்பாவும் என்னை குற்றவாளின்னு சொல்லுவாங்க." என்றான் கோபத்தோடு.

"நான் எதுக்கு சாக போகிறேன். அந்த அளவுக்கு யாரும் இங்கே உசந்துவிடவில்லை." என்றவள் அவன் கையை உதறிவிட்டு வேகமாக நடந்தாள் வீட்டை நோக்கி. அவள் நான்கு எட்டு எடுத்துவைத்தால் இவன் கோபத்தோடு ஒரு எட்டுவைத்து மெதுவாக அவள் பின்னே சென்றான். இருவரும் அப்பார்ட்மெண்ட் அருகில் வந்து சேர்ந்தார்கள். அவன் இவள் பின்னே வர அவன் வரும் வரை காத்திருந்து அவன் வந்ததும் அவனுடைய கைக்குள் தன் கையை கோர்த்துக்கொண்டு யாரும் சந்தேகத்துடன் பார்க்காதவண்ணம் சிரித்த மேனிக்கு உள்ளே சென்றாள்.

விழியோரம் காதல் கசியுதேDonde viven las historias. Descúbrelo ahora