அத்தியாயம் -28

4.2K 191 41
                                    

மணமேடை வரைவந்து காதலித்தவனை கைப்பிடிக்காமல் பணத்தை காரணம் காட்டி தன் தந்தையின் சொல்பேச்சை கேட்டு விதுலனை பாதியில்விட்டுட்டு வந்தது சதன்யாவுக்கு தவறாக தெரியவில்லை.  அது அவளோடுடைய எண்ணவோட்டம். 

காதல்தான் பெரிசு என்று அவரசரப்பட்டு கல்யாணத்தை பண்ணிட்டுவந்து அப்புறம் ஐந்துக்கும், பத்துக்கும் இருவரும் அடித்துக்கொண்டு இருப்பது சரிவராது என்று நினைத்தாள் அவள்.  அவளின் உச்சதலை முதல் உள்ளங்கால்வரை பணத்தின் ஆட்சிதான் அதிகம்.  ஒரு மாதத்திற்கு அழகுநிலையத்திற்கு மட்டும் லட்சகணக்காக பணத்தை செலவிடுபவள்.  தேவையோ இல்லையோ  ஷாப்பிங் என்ற பெயரின் ஊரில் இருக்கும் அத்தனை மால்லையும் ஏறி இறங்கி பிடித்ததை அள்ளிக்கொண்டு வரும் வளர்ப்புமுறையில் வளர்ந்தவள் அவள். 

வெறும் காகிதத்திற்கும், பணத்திற்கும் வித்தியாசம் தெரியாது அவளுக்கு. எல்லாமே ஒன்றுதான் அள்ளி எறியும் அளவுக்கு.  இவளை இப்படி வளர்த்திருப்பதால் இவர்கள் குடும்பம் ஒன்றும் பரம்பரை பணக்கார குடும்பம் கிடையாது. இவள் பிறந்த பிறகு வந்த திடீர் யோகம்.  அதனால் அவளுக்கு எல்லாமே ஸ்பெஷல்தான்.  அவள் பெற்றோருக்கு இதே வாழ்க்கைமுறை அவளுக்கு இறுதிவரை கொடுக்கமுடியுமா என்பதில் ஏக சந்தேகம்.  வரவுக்கு மிஞ்சிய செலவு எப்போதுமே ஆழமான ஆழ்துளை கிணறு போல.  விழுந்தால் எழ முடியாது.  இவர்கள் குடும்பம் அதைத்தான் செய்துக்கொண்டிருந்தது.  செலவை சமாளிக்க கடன், அதை அடைக்க அதிகவட்டிக்கு வாங்கிய கடன் என்று வெளியே பார்த்தால் மினுக்கடி, உள்ளே பார்த்தால் புழுக்கடி என்ற ரகத்தை சேர்ந்த குடும்பம். 

சதன்யாவுக்கு இதெல்லாம் தெரியாது. இன்றைய சில பெண்களை போல உள்ளவள்.  கஷ்டபடுபவர்களை பார்த்தால் பரிதாபப்படுவாள் அவ்வளவுதான், அதற்கு மேல் உதவி என்று கையை நீட்டமாட்டாள்.  நீட்டினால் அதில் நமக்கு என்ன இழப்பிடு வரும் என்று நினைப்பவள்.  யாருக்கும் இடைஞ்சலும் செய்யமாட்டாள், உதவியும் செய்யமாட்டாள்.  அவள் வாழ்க்கையை மட்டும் பார்க்கும் ஒரு ஜீவன்.  அவளுக்கு ஆண்டவன் கொடுத்த அழகில் கிடைத்தவன்தான் ஜெய் விதுலன் என்ற செல்வந்தன்.  அதற்காக பணத்தை மட்டும் பார்த்து அவள் காதலிக்கவில்லை. அவனிடம் அழகு, படிப்பு, பணம் என்று எல்லாமே இருந்தது.  இவளுக்கும் பிடித்தது காதலிக்க தொடங்கினாள். உண்மையான காதலும் கூட. 

விழியோரம் காதல் கசியுதேOù les histoires vivent. Découvrez maintenant