அத்தியாயம் -36

4.9K 200 36
                                    

அன்று இரவு விதுலன் வளவனுக்கு போன் செய்தான். "என்ன மச்சான் உன் தங்கச்சி என்ன சொல்றா?" என்றான்.

"நீ வந்து அவளை என்ன செய்து தொலைச்ச? ஒரே கண்ணீர்! முதல்நாள் ஸ்கூல் போகும் குழந்தை அழுது அடம்பிடிப்பது போல அழுறா, அவன்ட போகமாட்டேன், போகமாட்டேன்னு ஒரே பாட்டைத்தான் திரும்ப திரும்ப படிக்குறா.  நானும் அப்பாவும் சொல்லி சோர்ந்து போயிட்டோம்.  அம்மாதான் இனி அவளுக்கு சரி. அம்மா பார்த்துட்டே இருக்காங்க, இப்போ தொடங்கிவிடுவாங்க. நாலு போட்டாவது உன் வீட்டுல கொண்டு விட்டுடுவாங்கன்னு நினைக்கிறேன்." என்றான் வளவன். 

"அவ்வளவு பிடிவாதமா அவளுக்கு.  ஓகே ஓகே ரொம்ப போர்ஸ் பண்ணாதிங்க.  அப்புறம் வேற எங்கேயாவது கம்பிய நீட்டிடுவா. சரியான ஊமை குசும்பு பிடிச்சவ.  அவ இங்கே வரட்டா பரவாயில்லை.  நீ இங்கே வா, நான் உன் வீட்டுக்கு வரேன்." என்றான் விதுலன். 

"நீ இங்கே வருவதற்கு நான் ஏன் அங்கே வரணும்? நீ இங்கே வந்தா நான் என் பொண்டாட்டியை பார்க்க போயிருவேன்.  எப்போ வருவ? என்று ஆவலாக கேட்டான் வளவன். 

"நீ உன் பொண்டாட்டியை பார்க்க நான்தான் கிடைச்சேன்னா? உன் தங்கச்சி இங்கே வரலன்னா வரேன். அவளை ஒன்றும் சொல்லாதிங்க.  குரங்கு இஷ்டம் போல இருந்துட்டு போறா." என்றான். 

"ஓகே" என்று போனை வைத்த வளவன் விதுலன் கூறியதை கூறவும் "கேட்டியாடி கூறு கெட்டவளே! உன் மேல எவ்வளவு பாசம் இருந்தா அவ்வளவு பெரிய வீட்டை விட்டுட்டு இந்த வீட்டுக்கு வரேன்னு சொல்லுவான்.  ஏற்கனவே உன்னாலதான் வீட்டைவிட்டு வெளியே வந்து கஷ்டபட்டான்." என்று தாயார் கூறவும் 

"நான் என்ன செய்தேன்?" என்றாள் இனியா. 

"யாருக்கு தெரியும்? யாரும் சொன்னால்தானே தெரியும்?" என்றார் மலர்விழி. 

"தெரியாட்டி அதைப்பற்றி ஏன் பேசுறிங்க? நானா அவரை என் பின்னே வர சொன்னேன். நான் எங்கேயும் போகமாட்டேன், அவரும் இங்கே வரக்கூடாது." என்றாள் மகள் வீம்பாக. 

விழியோரம் காதல் கசியுதேOù les histoires vivent. Découvrez maintenant