அத்தியாயம் -13

3.1K 151 17
                                    

திருமண வாழ்க்கை எல்லோருக்கும் ஆரம்பத்திலேயே  ஒழுங்காக அமைந்துவிடாது.  உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு பெண்களும் உளவியலை கற்காமலேயே அதில் புலமை பெற்றவர்கள்.  அவர்களின் பார்க்கும் முதல் நோயாளிதான் இந்த கணவன்மார்கள். திருமணம் முடியும் வரை யாரையும் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் இருப்பதில்லை பெண்களுக்கு.  

திருமணம் முடிந்த பிறகு கணவன் என்ற பெயரில் வந்த கணவான்கள் கொடுக்கும் குழப்பமும், எரிச்சலும், டார்ச்சரும் அப்பெண்ணை ஒரு மனதத்துவ நிபுணராக மாற்றிவிடும்.  என்னவருக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? எப்போ சிரிப்பார்? எப்போ கோபத்தில் கொதிப்பார்? இப்படி அத்தனையையும் தெரிந்துகொண்டு அப்புறம்தான் தன் ஆட்டத்தை தொடருவாள்.  தன் கணவனைப்பற்றி படிக்கும் வரை பொறுமை காத்த மனைவி இறுதிவரை அவனுடன் இருந்துவிடுவாள்.  ஆனால் அவனைப்பற்றி படித்தும் அவனுக்காக நான் ஏன் மாற வேண்டும்? அவன் பெரிய இவனா? என்ற கேள்விக்கு இடம் கொடுத்துவிட்டாள் என்றால் அப்புறம் கோர்ட்டில் தான் இருப்பு. 

எல்லா பெண்களுக்கும் வாய்ப்பவன் சரியாக இருப்பதில்லை.  சரியில்லாததை சரிசெய்த,  இல்லை அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதனுடனே வாழ பழகுற பெண்கள்தான் இரும்பு மனுசி.  

இங்கே ஒருத்தியும் அந்த லிஸ்டில் சேரலாம் என்று நினைத்தாளோ? என்னவோ? பத்துநாள் அவனின் மிருகத்தனமான செயலில் அவன் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறான்? என்றே யோசித்தாள்.  யோசிக்கும் அந்த அப்பாவி குழந்தைக்கு இன்னும் கொஞ்சம் டைம் கொடுத்திருக்கலாம்.  அதற்குள் இதுவரை நான் நடந்துக்கொண்டது மிருகத்தனத்தில் சேராது, இனிதான் உனக்கு இருக்கிறது என்பது போல அன்று விதுலன் நடந்துக்கொண்டான்.  

இனியா  விஜய் ரசிகை.  விஜய் நடிக்கும் படத்தில் வரும் மெசேஜ்ஜும் சரி, சில விழாக்களில் அவர் கொடுக்கும் மெசேஜ்ஜும் சரி அத்தனையும் அம்மணிக்கு அத்துப்படி.  அதனால்தான் விதுலன் உடலாலும், மனதாலும் இவளை துன்புறுத்தின போதும் அது என்னை எள்ளளவும் பாதிக்கவில்லை என்பது போல ஒரு முகத்திரையை போட்டுக்கொண்டு அவனிடம் ஒரு அலட்சிய போக்கை கடைப்பிடித்திருந்தாள்.  நீ என்னவும் பேசிவிட்டு போ.  உன் அறையில் இருக்கும் உயிரற்ற பொருட்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது போல ஒரு திமிருடன் அவனை பார்ப்பாள். 

விழியோரம் காதல் கசியுதேNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ