அத்தியாயம் - 15

3.4K 186 27
                                    

எப்போதும் செல்லும் பைவ் ஸ்டார் ரெஸ்டாரன்ட்டில் இருந்தான் விதுலன் கண்ணாடி வழியாக வெளியே தெரியும் ரோட்டை பார்த்துக்கொண்டு.  அவன் முகத்தில் கவலை, யோசனை, குழப்பம் என்று எல்லா எதிர்மறை உணர்ச்சிகளுக்கும் பஞ்சமே இல்லாமல் இருந்தது.  எப்போதும் இருக்கும் டேபிளில் இல்லாமல் வேறு ஒரு டேபிளில் இருப்பவனிடம் வந்து நின்றான் ஒரு வெயிட்டர் ஆர்டர் எடுப்பதற்கு. அப்போது அவனின் பார்வை அங்கே அவர்கள் பக்கத்தில் இருந்த இரண்டு ட்ராலி மேல்பட்டு மீண்டது.

அவன் பார்வை போன திசையையும் பார்த்துக்கொண்டு, அவனுக்கு ஆர்டர் கொடுக்காமல் ரோட்டை பார்த்துக்கொண்டிருக்கும் விதுலனையும் பார்த்தாள் இனியா.  பிறகு அவளே ஆர்டர் கொடுத்தாள் ஒரு காஃப்பிக்கு. வெயிட்டர் சென்றுவிட 

"என்ன பண்ணுற? பெட்டியும் கையுமா இந்தமாதிரி ஒரு ஹோட்டலில் வந்து உட்காந்திருக்க.  அந்த வெயிட்டர் கூட ஒரு மாதிரி பார்க்கிறான்.  ஏதாச்சும் ஒரு முடிவை எடு." என்றாள் இனியா அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.  

அவளை கோபத்தோடு பார்த்தான் விதுலன்.  'இதை இவ சொன்னால்தான் எனக்கு தெரியுமா? நானும் வீட்டைவிட்டு வெளியே வந்த நேரத்தில் இருந்து அதைதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.  அத்தனை கார்டையும் வாங்கிக்கொண்டுதான் என்னை பெத்தவர் வீட்டைவிட்டு வெளியே துரத்தியிருக்கிறார்.  உழைத்து நாலு காசை சம்பாதித்தால்தான் எனக்கு அடுத்தவங்க கஷ்டம் என்னன்னு தெரியுமாம்.  இப்போ யாரு கஷ்டத்தை நான் உணராமல் போனேன்?' என்று நினைத்தான் விதுலன் மனதிற்குள்.  

ஆனால் ஒன்றும் பேசவில்லை.  அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.  அவன் முன் அவள் பூதாகரமான பிரச்சனையாக அமர்ந்திருந்தாள்.  இப்போ இவன் தனியாள் என்றால் யாராவது ஒரு நண்பனுடன் போய் தங்கியிருப்பான். ஆனால் இப்போது அது முடியாது.  இவளை கூட்டிக்கொண்டு அப்படியெல்லாம் போக முடியாது.  அதுமட்டுமல்ல இவ்வளவு நாள் ராஜா வீட்டு கன்றுகுட்டியாக எல்லோருக்கும் கொடுத்து கொடுத்தே பழக்கப்பட்டவனுக்கு இப்போது யாரிடமும் உதவின்னு கேட்க கெவுரவ குறைச்சலாக இருந்தது. 

விழியோரம் காதல் கசியுதேOù les histoires vivent. Découvrez maintenant