அத்தியாயம் - 8

3.5K 174 21
                                    

ஜெய் விதுலன் வெட் சதன்யா என்று பத்திரிகை பிரிண்ட் பண்ணி வந்திருந்தது.  ஏற்கனவே தூரத்தில் இருப்போருக்கு எல்லாம் போஸ்ட் அனுப்பியாச்சு.  இது விதுலனின் நண்பர்களுக்காகவும், பக்கத்தில் இருப்போர்களுக்காகவும். 

"இதில் கொஞ்சம் பெண் வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்." என்று வித்யா சொல்லிக்கொண்டு இருக்கவும், அவரின் பிறந்தநாள் ஆல்பம் வந்தது. எப்போதும் இதுபோல செய்வதில்லை.  ஐம்பதாவது பிறந்தநாள் என்பதால் போட்டோ எடுத்திருந்தார்கள்.  ஆல்பம் வந்ததும் தன் கணவருடன் சேர்ந்து ஆர்வத்துடன் ஒவ்வொரு போட்டோவையும் பார்த்துக்கொண்டே வந்த வித்யாவின் கை ஒரு பக்க  போட்டோவை பார்த்து அப்படியே நின்றுவிட்டது.  மனைவியின் திகைத்த நிலையை பார்த்து 'என்னடா?' என்று யோசித்த ஜெய்கணேஷ் பார்வையை அங்கே அனுப்பிவைக்க அவருமே ஷாக் ஆகி போனார். 

"என்ன கணேஷ் இது?" என்றார் வித்யா அதிர்ச்சி விலகாமல். 

"என்னை கேட்டா எனக்கு என்ன தெரியும்? உன் மகனிடம் கேள்.  அவனுக்குதான் ஸ்டுடியோ காரன் போடோஸ் எல்லாத்தையும் அனுப்பி வைத்து எதெல்லாம் போடவேண்டும் என்று கேட்டான்." என்றார் அவர். 

"எங்கே அவன்? இவனை எந்த நேரத்தில் பெத்தேனோ தெரியவில்லை.  தினம் தினம் ஒரு பிரச்சினையுடனே அலைகிறான்." என்றார் வித்யா கோபத்துடன்.

"சரி விடு இதுல என்ன இருக்கு? இவளும் நம்ம வீட்டு பிள்ளை மாதிரிதானே." என்றார் ஜெய்கணேஷ்.

"முட்டாள் மாதிரி பேசாதீங்க கணேஷ்.  உங்க மகனுக்கு புத்தி பூ பறிக்க போய்விட்டது. எப்படி போஸ் கொடுத்திருக்கிறான் பாருங்க.  இதெல்லாம் இவன் சதன்யாவுடன் செய்திருக்க வேண்டும்.  இவள் நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு போற பொண்ணு.  இதை யாராச்சும் பார்த்தால் எவ்வளவு பெரிய பிரச்சனை வரும். அவன்தான் புத்தியில்லாமல் போனான் என்றால் இவளாவது கொஞ்சம் புத்தியுடன் நடந்திருக்கலாம்." என்று வித்யா கோபத்துடனே பேசிக்கொண்டிருக்கவும் விதுலன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

விழியோரம் காதல் கசியுதேNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ