அத்தியாயம் 35

4.5K 197 25
                                    

"ஜெய் எங்கே கிளம்பிட்ட? இன்னைக்கு வளைகாப்புக்கு போகணும் என்று நேற்றே சொன்னே!" என்றார் ஜெய்கணேஷ். 

"சாரிப்பா ஒரு அர்ஜென்ட் வேலை இருக்கு.  நீங்க போங்க நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்.  புது வொர்க் ஸ்டார்ட் பண்ணுறோம்.  வொர்க்கை அசேன் பண்ணி கொடுத்துட்டு வந்துடுறேன்." என்றான் விதுலன் வேகமாக சாப்பிடப்படி. 

"எதுக்கு ஜெய் இப்படி ஓடுற? இருக்கிற வேலையை பார்க்கவே நேரம் பத்தல? உன் வேலைக்கு நீயே நேரடியாக போகனுமா என்ன? ஒரு நல்ல ஆளை பார்த்து போடலாமில்லையா?" என்றார் வித்யா. 

"என்னம்மா செய்யுறது?  ஆள் போட்டு அவங்க கண்காணிப்பில் விடுற அளவுக்கு நான் இன்னும் வளரலையே. நேரடியா பார்க்காமல் கொஞ்சம் பிசங்கினாலும் நாலு படி கீழே சரிஞ்சிடுவேன்.  ஒரு பார்ம்க்கு வந்த பிறகு வேலை ஆள் வைத்துக்கொள்ளலாம்." என்றான் விதுலன். 

"எத்தனை நாளுக்கு இப்படி சின்ன சின்ன ஸ்டெப்பா வச்சு போவ? அதிகமா முதலீடு போட்டு பெரிய அளவில் செய்தால் என்ன? பணத்துக்கா பஞ்சம்?" என்று தாயார் கேட்க அவரை நிமிர்ந்து பார்த்தான் விதுலன். 

" பஞ்சம்தாம்மா." என்றவன் இட்டலி வாங்க எல்லா பர்ஸ்சையும் உருட்டியதை கூறினான். "அதுக்கு பிறகு நான் தேவையில்லாமல் அதிகமா செலவு செய்ததே இல்லை.  பத்து ரூபான்னா கூட அதுக்கும் ஒரு மதிப்பு இருக்குன்னு அப்புறம் புரிஞ்சிகிட்டேன்.  அப்படி வளர்த்த கம்பெனி இது.   குழந்தையை கருவில் ஏந்தி அதை எப்படி பொத்தி பொத்தி வளர்ந்து அது நாளோரும் வண்ணம் வளருரத பார்த்து ஒரு தாய் சந்தோஷ படுவாங்களோ அப்படிதான் இந்த கம்பெனி எனக்கு.  இது என் நிலாவோடுடையது.  அவளுடைய உழைப்பும், இரத்தமும் அதுல இருக்கு.  அதை  படிபடியா நான் என் உழைப்பில்தான் உயர்த்துவேன்." என்று கூறிவிட்டு சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு கை கழுவ சென்றான். 

இந்த வீட்டில் வேலை ஆட்களுக்கு பஞ்சமே இல்லை.  கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர எப்பவும் நாலு பேர் இருப்பார்கள்.  ஆனால் விதுலன் அவர்களின் யார் உதவியையும் நாடியதில்லை.  எல்லாம் அவனே செய்துகொள்வான்.  சில நேரம் தனக்கு வேண்டியதை தானே சமைத்தும் கொள்வான்.  இதெல்லாம் இனியாவிடம் அவன் கற்றது. 

விழியோரம் காதல் கசியுதேHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin