அத்தியாயம் -5

3K 149 10
                                    

திருமண தேதியெல்லாம் இன்னும் குறிக்கப்படவில்லை.  அதற்குள் அதற்கான ஏற்பாடு என்று ஒரு பெரிய தொகை  தினம் தினம் போய்க்கொண்டே இருந்தது.  செலவழிக்கும் பிள்ளைகளுக்கில்லை,  சேர்த்து வைக்கும் தகப்பனுக்குத்தான் தெரியும் அந்த பணத்தின் அருமை.  உழைப்பவர்களுக்கும் தெரிய வாய்ப்பிருக்கு.

விதுலனுக்கு அப்பன் சேர்த்து வைத்த காசும் இருக்கு, அதை எப்படியெல்லாம் செலவு செய்ய வேண்டும் என்ற தெரிந்த ஒரு காதலியும் இருக்கிறாள்.  ஆனால் உழைப்பின் அருமைதான் தெரியவில்லை.  உடம்பில் இருந்து ஒரு நான்கு சொட்டு வேர்வை வெளியேறினால் திருந்திவிடுவானா? என்ற பேராசை கொண்டார் ஜெய்கணேஷ்.

பாவம் தெரியாத்தனமாக ஆசைபட்டுவிட்டார்.  பிறகு அதை நிறைவேற்றவேண்டிய முயற்சியில் இறங்கித்தானே ஆகவேண்டும்.  அதிலும் இறங்கினார்.

ஒரு இரண்டு நாட்கள் அதிக களைப்பையும், சோர்வையும் முகத்தில் காட்டிக்கொண்டு மகன் பார்க்கும் வண்ணம் அவனை நான்கு முறை கடந்துவந்தார்.  அவனும் பார்த்துவிட்டு என்னவென்று விசாரிக்க, எப்போ எப்போ என்று இருந்தவர் தன் மனக்கவலையை எல்லாம் கொட்டிவிட்டார்.

"என்னன்னு தெரியல ஜெய், இப்பல்லாம் எனக்கு ரொம்ப நேரம் வேலை செய்ய முடியல.  ஹார்ட் அட்டாக் பரம்பரை வியாதி இல்லையென்றாலும், என் அப்பாவுக்கு வந்தது போல எனக்கும் வந்துட்ட கூடாதுன்னு நான் தினமும் கடவுளை வேண்டிக்கிறேன்.  உன் அம்மாவின் தாலி பலம்தான் என்னை காத்து நிற்கணும்." என்றார் மிகவும் சோகமாக.

"என்னப்பா இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கிங்க? உடம்பு சரியில்லை என்றால் போய் டாக்டரை பார்க்கணும்.  அதை விட்டுட்டு என் அம்மாவை எதுக்கு கலங்க வைக்கிறிங்க?" என்றான் விதுலன் கணவன் பேச்சில் கலங்கி நின்ற தன் தாயை பார்த்துவிட்டு.

"போய் பார்க்காமல் இருப்பேனா? எனக்காக இல்லாவிட்டாலும் உன் அம்மாவுக்காக என்னை பத்திரமாக பார்த்துக்க மாட்டேனா? ஆனா டாக்டர் இப்படி ஒரு குண்டை தூக்கி போடுவாருன்னு நான் என்ன கனவா கண்டேன்? அவர் சொல்வது போல நடக்க முடியுமா? அதெல்லாம் சாத்தியமே இல்லை." என்று மறுபடியும் சோக காட்சி.  

விழியோரம் காதல் கசியுதேHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin