அத்தியாயம் 30

4.3K 197 35
                                    

ஜெய்கணேஷ் மகனிடம் நேரில் வந்து பேச, வித்யா போனில் பேசினார்.  அதைப்பற்றி பேசி முடிப்பதற்குள் இரண்டு சண்டை கோழிகளும் முட்டிக்கொண்டு நின்று ஒருவழியாக  அவர்களின் வீட்டுக்கு திரும்ப சென்றார்கள்.  ஒன்டரை வருடம் நடித்த நடிப்பு கை கொடுக்க அங்கே சேரும் இயல்பாக நடித்தார்கள்.  

ஆனால் அவர்கள் நடிப்பை மீறி சில நேரத்தில் இயல்பாக அவர்களின் அன்பு வெளிப்படத்தான் செய்தது.  எதிரே இருந்து பார்த்தவர்கள் கண்ணுக்கு தெரிந்த அந்த அன்பு அதை வெளிபடுத்தியவர்களுக்கு என்னவென்று தெரியாமல் போனது.

டைனிங் டேபிளில் அமர்ந்து பெற்றோருடன்  சாப்பிட உட்கார்ந்த விதுலன் அங்கு வைக்கபட்டிருந்த உணவை பார்த்து லேசாக முகத்தை சுளித்தான்.  புட்டும் அதற்கு தேவையான சைட் டிஷ்சும் இருந்தது.  மகனின் முகம் போன போக்கை பார்த்த வித்யா "என்னடாம்மா அப்படி பார்க்குற? உனக்கு பிடிக்குமே என்று நான்தான் இதை செய்ய சொன்னேன்." என்றார்.

"பிடிக்கும்மா.  ஆனால் இதை இப்போ சாப்பிட்டுட்டு இருக்க முடியாது.  அதுமட்டுமல்ல இது எனக்கு பசி தாங்காது.  நான் ஓடிட்டே இருப்பேன். இடையில் பசிச்சா டீயை தவிர ஒன்றும் சாப்பிட எனக்கு நேரம் கிடைக்காது." என்று கூறிக்கொண்டே எதிரே இருந்த மனைவியை பார்த்தான்.  அவள் அவளுடைய வயிற்றை நிரப்பிக்கொண்டு இருந்தாள்.   அவள் தன்னை கவனிக்கவில்லை என்று உணர்ந்தவன் வேறு வழியில்லாமல் கொஞ்சமாக புட்டை தன் தட்டில் எடுத்து வைத்து கொறிக்க ஆரம்பித்தான். 

கீழ் கண்ணு போட்டு அவனை பார்த்துவிட்டு  எழுந்து கிட்சனுக்கு போனாள். மகனுக்கு இந்த உணவு பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் வித்யா உடனே வேறு ஏற்பாடு செய்திருப்பார்.  ஆனால் அதற்குள் இனியா எழுந்து செல்லவும் அவர் அமைதியாக இருந்தார். சென்றவள் தோசையை சுட்டு அவனுக்கு பிடித்தது போல பொடியில் பிரட்டி கூடவே ஒரு பெரிய டம்ளரில் சத்து மாவு கரைசலையும் கொண்டுவந்து வைத்தாள். அவன் கொறித்துக்கொண்டிருந்த புட்டை எடுத்து தன் தட்டில் போட்டு அதையும் சேர்த்து சாப்பிட தொடங்கினாள்.

விழியோரம் காதல் கசியுதேHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin