அத்தியாயம் -9

3.2K 172 21
                                    

காந்தபார்வை..காந்தபார்வை என்று கேள்விப்பட்டிருக்கிறாள்.  இப்பொழுதுதான் அதை முதல் முறை நேரில் பார்க்கிறாள் இனியா.  மோதிரம் மாற்றும் நேரத்திலும் சரி, மாலை மாற்றும் நேரத்திலும் சரி மணமக்களின்  பார்வையும் ஆயிரம் காதல் கதை பேசியது. இருவரும் ஒருவித நெகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்பது அவர்களை பார்க்கும் போதே தெரிந்தது.  இனியா  சிரித்துக்கொண்டாள் விதுலனை நினைத்து.  தன்னிடம் எப்போதும் கோப முகத்தையே காட்டும் அவனின் இன்னொரு முகத்தை பார்த்து கொடுத்துவைத்தவள் இந்த சதன்யா என்று நினைத்துக்கொண்டாள். 

நிச்சயதார்த்தம் நல்லபடியாகவே முடிந்தது.  விடிந்தால் முதல் முகூர்த்தத்திலே கல்யாணம். முதல் முகூர்த்தம் காலை எழு மணிக்கு.  அந்த மண்டபமே கல்யாண கலகலப்பில் இருந்தது.  நிச்சயம் நடந்து ஒருசில மணிநேரத்தில் இருவீட்டாருக்கும் இடையே ஏதோ பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருந்தது.  இந்த நேரத்தில் என்ன சத்தம்?  என்று பாதி தூக்கத்தில் எழுந்து போனாள் இனியா.

"நீங்கள் இதை எப்படி இதை என்னிடமிருந்து மறைக்கலாம்?" என்று கோபத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார் சதன்யாவின் அப்பா வேணுகோபால்.

"இதில் என்ன இருக்கிறது என்று நாங்கள் இதை மறைக்கபோகிறோம்? தொழில் என்றால் சில ஏற்ற இறக்கங்கள் வரத்தான் செய்யும்.  அதையெல்லாம் வெளியே சொல்லிக்கொண்டு இருக்க முடியுமா? அதுமட்டுமல்ல இதில் உங்கள் மகளுக்கு என்ன பாதிப்பு வந்துவிட போகிறது.?" என்றார் ஜெய்கணேஷ்.

"இப்படியெல்லாம் பேசி நீங்கள் என்னை ஏமாற்ற முடியாது. என் மகள் உங்கள் வீட்டில்தானே வாழ போகிறாள். நான் அவளை தங்க தட்டில் வைத்து வளர்த்திருக்கிறேன்.  இப்படி சரிந்துக்கொண்டு இருக்கும் குடும்பத்தில் என் பெண்ணை கட்டிகொடுத்து அவளை கஷ்டப்பட சொல்றிங்களா?" என்று அவர் கேட்க 

"சரிவு நிரந்தரம் இல்லை அங்கிள்." என்றான் விதுலன். 

"நீங்க பேசாதிங்க.  என் மகள் உங்களை காதலித்தால் என்பதற்காக நான் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.  அவளை நாள் வசதி வாய்ப்பாக வாழ வைப்பீர்கள் என்றுதான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தேன்.  போற போக்கை பார்த்தா உங்க குடும்பத்தையே நாங்கதான் பார்க்கவேண்டும்  போல.  இந்த கல்யாணம் இப்போதைக்கு நடக்காது." என்றார் வேணுகோபால்.

விழியோரம் காதல் கசியுதேDonde viven las historias. Descúbrelo ahora