அத்தியாயம் - 18

3.3K 171 26
                                    

"ம் மாப்பிளை கையில் ஏக துட்டு போல.  வரான், போறான். என்னத்தை திங்குறானோ! பட்டினியா கிடக்கிறானோ! இப்படி ஒரு பிள்ளையை வளர்த்து வச்சுட்டு எதுக்கு இந்த அத்தைக்கும், மாமாவுக்கும்  கோபம் எல்லாம் வருது. இரண்டு நாளில் பத்து கிலோ குறைஞ்சது போல ஆயிட்டானே பயபுள்ள." என்று யோசித்துக்கொண்டே இரவு உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் இனியா. 

அப்போது விதுலன் உள்ளே வந்துக்கொண்டிருந்தான்.  காலையில் கிளம்பி போனவன் ராத்திரிதான் வருகிறான்.  எங்கே போவான்? என்ன செய்வான் என்று இவளுக்கு எதுவும் தெரியாது. இப்போதெல்லாம் இவள் அவனை சாப்பிட சொல்லுவதும் கிடையாது.  சாப்பிட கூப்பிட்டால் எப்போதும் சுருக்கென்று பேசிவிடுகிறான்.  உடம்பில் பெல்ட் அடி தடம் இருக்கும் வரையில்தான் அவனிடம் கொஞ்சம் கரிசனை தெரிந்தது.  அதன் பிறகு முன்னே மாதிரி இல்லாவிட்டாலும் முசடுமாதிரிதான் திரிகிறான்.  அவனிடம் பேசி மறுபடியும் அடி வாங்க கூடாது என்று இவள் ஒதுங்கி போனாள். 

 இவள் சமையல் அறையை ஒதுக்கிக்கொண்டு இருக்க "வவ்..வவ்.." என்று வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது பாத்ரூமில்.  இவள் ஓடி சென்று பார்க்க விதுலந்தான் வாந்தி எடுத்துக்கொண்டு இருந்தான் குடலே வெளியே வரும் அளவுக்கு. 

"விதும்மா என்னாச்சு???" என்று பதறிக்கொண்டு ஓடி அவன் தலையை நிமிர்த்தி பிடித்தாள் இவள்.

"தெரியல ஒரே வாமிட்டா வருது. ஸ்டொமக் வேற பெயினா இருக்கு." என்றான் அவன் சரியாக நிற்க கூட முடியாமல்.  அவன் நெற்றியை தொட்டுபார்த்தவள் "நைட் என்ன சாப்பிட்ட?" என்று கேட்டாள். 

"ஒன்னும் சாப்பிடல.  மதியம் சாப்பிட்டது ஒழுங்கா ஜீரணமாகல.  பசிக்கல." என்றான் அவன் சோர்ந்து போய்.  மறுபடியும் வாந்தி. 

"கண்ட்ரோல் பண்ணு விது." என்றவள் நீரை அடித்து அவன் முகத்தை கழுவிவிட்டாள்.  அவன் உடல் லேசாக சுட தொடங்கியிருந்தது. 

"என்னத்தை தின்னு தொலைச்ச? உனக்குத்தான் வெளி சாப்பாடு ஒத்துக்காதே அப்புறம் ஏன் இந்த வீம்பு? புட் பாயிசன் ஆகிருக்கும் போல.  வா ஹாஸ்பிடல் போகலாம்."என்றாள் அவள் அவனை கைத்தாங்கலாக வெளியே அழைத்து வந்து.

விழியோரம் காதல் கசியுதேHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin