அத்தியாயம் - 20

3.4K 178 19
                                    

மறுநாள் அவளின் கார்டை அவளிடம் கொடுத்தான் விதுலன். "ஆயிரம் ரூபாய் எடுத்தேன்.  எழுதிவச்சுக்க, அப்புறமா சேர்த்து தந்திடுறேன்." என்றான்.

"நீயே எழுதிவச்சிக்க.  கார்ட் உன்னிடமே இருக்கட்டும்.  என்னிடம் வேற பேங்க் கார்ட் இருக்கு.  உனக்கு எப்போ பணம் தேவைன்னு நான் பார்த்துட்டு இருக்க முடியாது.  நான் ஒரு அமினிசியா பேசன்ட்.  நீ நான் நேற்று சொன்னதை ரெடி பண்ணி வை." என்றாள் அவள் வேலையை பார்த்துக்கொண்டு.

"என்ன விளையாடுறியா? என்னால் அதெல்லாம் செய்யமுடியாது.  முதலில் குடியிருக்க ஒரு வீடு இருக்கா? அடுத்தவர் வீட்டில் வந்து தங்கியிருக்கோம்.  இப்போ போய் கடன்வாங்க சொல்லுறியே கத்து குட்டி." என்றான் அவன். 

"வீடெல்லாம் பார்த்தாச்சு. நாளைக்கு அங்கே கிளம்பி போயிடலாம். நான் விளையாட்டுக்கு சொல்லல ஜெய்.  ஒழுங்கா நான் சொல்றதை கேளு.  அப்போதான் உன் சதுவை சீக்கிரம் கட்டிக்க முடியும்." என்றாள் இனியா.

"சும்மா வார்த்தை ஜாலம் காட்டாதே.  முதலில் அடிப்படை தேவையை பார்த்துக்கொள்கிறேன்.  அப்புறம் பார்க்கலாம் இதைப்பற்றி." என்று அவன் அவனுடைய பிடியில் நிற்க 

"முடியவே முடியாது ஜெய்.  நீ வேலைக்கு எல்லாம் போக கூடாது.  உனக்கு விருப்பமான ஒரு தொழிலை தொடங்குற வேலையை பார்.  நீ இன்டர்வியூ, வேலைன்னு கிளம்பின அப்புறம் மறுபடியும் நீ மருந்து போட்டுவிட வேண்டியது வரும்." என்று அவள் அவளுடைய பிடியிலேயே நின்றாள்.  

'அங்கே ஒருத்தி திரும்பி உன் அப்பாவிடம் போய்விடு என்று தினம் தினம் புத்திமதி சொல்லியே கடுப்பு ஏத்துறா.  இங்கே ஒருத்தி வெறும் கையைவைத்து முழம் போட சொல்லுறா? கையில் ஒரு பணம் இல்லாமல் என்ன தொழிலை தொடங்க முடியும்? சொன்னால் கேட்கிறாளா பாரு! இரண்டு பேருக்கு நடுவுல என் பாடு பெரும்பாடா போயிட்டு.  மிரட்ட ஆயுதம் கண்டுபிடிச்சிருக்கு பாரு குரங்கு.' என்று மனசுக்குள் வசைபாடினாலும் அவனின் இறுதி முடிவு இனியாவுடையதாகத்தான் இருந்தது.  அவனின் கண்ணுக்குள் இன்னும் தெள்ளிய காட்சியாக இருந்தது பெல்ட் அடிபட்டு அவள் புழுவைபோல துடித்தது.  மீண்டும் அப்படி ஒரு நிலையில் அவளை பார்க்கவே கூடாது என்று நினைத்துக்கொண்டான் அவன். 

விழியோரம் காதல் கசியுதேWhere stories live. Discover now