அத்தியாயம் -3

4.1K 175 20
                                    

மனைவி தன் மகனுக்காக பேச நினைக்கிறாள் என்று தெரிந்தும் அதை தவிர்க்க நினைத்தவரை பேசி எழுந்து அமர வைத்திருந்தார் வித்யா.

"சொல்லும்மா இப்போ என்ன பேசணும். பேச உன் மகன் எதை மிச்சம் வைத்திருக்கிறான் பேச? ஒரு சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய ஒரு சின்ன கடமையை கூட செய்யாமல் வந்து ஏதோ சாதனையை செய்தது போல பேசுகிறான். அதுக்கு நீ வக்காலத்து வாங்க வந்திருக்க." என்றார் அவர் அடக்கிகொண்ட கோபத்துடன்.

"நான் வக்காலத்து ஒன்றும் வாங்க வரவில்லை. அவன் தரப்பு நியாயத்தை சொல்ல நினைக்கிறேன். இனியாவை தவிர அந்த இடத்தில் வேற எந்த பெண்ணாக இருந்தாலும் அவன் அப்படி செய்திருக்க மாட்டன். என்னன்னு தெரியல! சின்ன வயசுல இருந்து அவளை அவனுக்கு பிடிக்க மாட்டேங்குது. அதுக்கு காரணமும் நாமதான். ஒத்த பிள்ளையாக வளந்துட்டான், மொத்த பாசமும் அவனுக்கு கிடைச்சிட்டு இருந்த நேரத்தில் இனியா குட்டி மேல நாம கொஞ்சம் பாசத்தை காட்டியது அவனுக்கு பிடிக்கல. அதான் இப்படி நடந்துக்குறான். அதுக்கு போய் நீங்க அவன் காதலிக்கிற பெண்ணை அவங்கிட்ட மட்டமா பேசுனா நல்லாவா இருக்கு." என்றார் வித்யா இறங்கிய குரலில்.

"இதெல்லாம் ஒரு காரணமா வித்யா? கோபம், தாபங்களை அடக்க தெரிந்திருக்கணும் மனுஷனுக்கு. அதெல்லாம் தேவையான இடத்தில்தான் வெளிப்படனும். இப்படி ஒரு இக்கட்டான நேரத்தில் இவன் அந்த பெண்ணை அப்படி அம்போன்னு விட்டுட்டு வந்திருக்கான். பக்கத்திலே இருந்தும் இவனுக்கு எடுத்து சொல்லி புரியவைக்காம இருந்திருக்கா அந்த சதன்யா.

நான் இன்னைக்கு நடந்ததை மட்டும் வச்சு இதை பேசல. உன் மகன் படிப்பை முடித்து எத்தனை வருஷம் ஆகிறது? இவன் வயசில் நான் என் அப்பாவின் தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு போயிட்டேன். ஆனா இவன் என்ன பண்ணுறான்? MBAவை முடிச்சிட்டு ஒரு ஆர்வத்தில் கம்பெனிக்குள் வந்தான். சரி நம்ம புள்ள நம்ம பெயரை காப்பாத்துவான் என்று நான் நம்பிட்டு இருந்தேன். அப்படித்தான் அவனும் எல்லாத்தையும் மின்னல் வேகத்தில் படிச்சான். இனி அவன் கையில் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிடலாம் என்று நான் நினைச்ச நேரத்தில் அந்த பொண்ணு பின்னாடி போயிட்டான் எல்லாத்தையும் விட்டுட்டு.

விழியோரம் காதல் கசியுதேOnde histórias criam vida. Descubra agora