அத்தியாயம் -37

7.8K 273 78
                                    

வளைகாப்பு வீட்டில் வைத்து அவன் கொடுத்த அதிரடி முத்தத்திலேயே அவளுக்குள் ஏக குழப்பம் கூடாரம் போட்டு குடியேறியது.  மீண்டும் அவன் அதே போல நெருங்க 

"அது எப்படி ஒருத்தி மனசுல இருக்கும் போது இன்னொருத்தியை கிஸ் பண்ண உங்களுக்கு மனசு வருது.  சரியான குப்பை." என்றாள் அவள் முகத்தை திருப்பிக்கொண்டு. 

அவளின் இந்த பேச்சில் அடிபட்டது போல அவளைவிட்டு பட்டென்று விலகினான் விதுலன்.  அவன் கைகளின் அழுத்தத்தில் இருந்த தன் கை சட்டென்று விடுதலை பெற்றதில் யோசனையுடன் திரும்பி அவன் முகத்தை பார்த்தாள் இனியா. அவன் முகம் இருந்த அழகை பார்த்தவளுக்கு ஏதோ தவறாக பேசிவிட்டோமோ என்ற குற்ற உணர்வு ஏற்பட்டு மெல்ல அவன் கன்னத்தை தொட்டாள். வேகமாக தட்டிவிட்டான் அவன். 

"தப்பு செய்யாத மனுஷன் எவன்டி? ஒரு பெண்ணை காதலிச்சது ஒரு தப்பா? அவளை கல்யாணம் செய்துட்டு வாழனும் என்று நான் நினைச்சேன், ஆனால் அவளோ பணம்தான் முக்கியமுன்னு என்னை விட்டுட்டு போயிட்டா.  கட்டாயமாக உன் கழுத்தில் தாலி  கட்ட வச்சாங்க.  இதுல என் தப்பு என்ன? நான் இரண்டு பெரிய தப்பு செய்தேன். ஒன்னு உன்னை மோசமாக பேசியது, அடுத்து உன்னை இரக்கமே இல்லாமல் அடித்து துன்புறுத்தியது.  அது தப்புன்னு நான் நீ வலியில துடிச்சப்பவே உணர்ந்துட்டேன். ஆனா கடவுள் எனக்கு அதுக்கு சரியான தண்டனை தந்தார்.

உன்னை கேவலமாக பேசிய என்னை அடுத்த வேலை சாப்பாட்டுக்கு உன்னை எதிர்பார்க்க வைத்தார். அந்த தண்டனை போதாதா ஒரு ஆம்பிளைக்கு.  திருந்திட்டேன்னு நானும் எப்படி எப்படியோ உனக்கு புரிய வைக்க பார்க்கிறேன்.  ஆனா நீ என்னை புரிஞ்சிக்கவே மாட்டாங்க. எச்சி, குப்பைன்னு மனசுல கனலை அள்ளி கொட்டுற.  எல்லாத்துக்கும் காதல் ஒருமுறைதான் வரணுமுன்னு ஏதாச்சும் ரூல்ஸ் இருக்கா என்ன? அப்படியே இருந்தாலும் இதில் நான் என்ன செய்ய முடியும்? எனக்கு இரண்டு முறை வந்து தொலைஞ்சிட்டே. இரண்டு முறை காதல் வந்தாலும் நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. 

விழியோரம் காதல் கசியுதேHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin