அத்தியாயம் -16

3.6K 176 29
                                    

அருமை பெருமையாக வளர்த்த ஒரு மகனை பிரிந்த சோகத்தில் அந்தபணக்கார பெற்றோர்கள் இருவரும் வேதனையில் இருந்தார்கள்.  வித்யாவிற்கு மகன் செய்த தவறை மன்னிக்கவே முடியவில்லை. பிள்ளை என்றால் எல்லோருக்கும் பிள்ளைதான். எல்லோருமே பத்துமாதம் சுமந்து உயிர் நோகத்தான் தன் குழந்தையை பெற்று எடுக்கிறார்கள்.  பணக்காரன் பத்து மாசமும், பணம் இல்லாத்தவன் இரண்டு மாசமும் சுமக்கவில்லை. 

ஒரு பெண்ணை தவமிருந்து பெற்று எடுத்து அவள் பாதம் நோகாமல், முகம் கசங்காமல் ஒரு இளவரசியை போல எல்லா பெற்றோர்களும் வளர்கிறார்கள்.  அவர்களை திருமணம் என்ற பெயரில் கழுத்தில் ஒரு தாலியை கட்டி கூட்டிவந்து என்னதான் செய்யவில்லை இந்த ஆண் இனம்!! அடியென்ன! வசவு என்ன! கஷ்டப்பட்டு பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்து அனுப்பும் பெற்றோர்களின் நிலையை வார்த்தை கொண்டு வடிக்க இயலாது.  

இனியா வீட்டில் பணம் காசு இவர்களை விட குறைவாக இருக்கலாம். ஆனால் அவள் மேல் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் அன்பிற்கு அளவு கிடையாது. ஒரு துரும்பு அவள் மேல் படாமல் வளர்த்தார்கள். அவளை போய் தன் மகன் மிருகத்தனமாக அடித்திருக்கிறானே என்ற கோபத்திலும், வருத்தத்திலும் இருந்த வித்யா ஆரம்பித்தில் கணவன் முடிவை ஏற்றுக்கொண்டார்.  ஆனால் நேரம் செல்ல செல்ல தன் பிள்ளையை நினைத்து கவலை எழுந்தது.

பணத்திலே குளித்தவன்.  கார், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் பர்ஸில் பல கார்டை வைத்திருப்பவன். சட்டை கசங்காமல் காலுக்கு ஒரு வேலையாள், கைக்கு ஒரு வேலையாள் என்று இருந்தவன்.  ரோட்டில் நடந்து போய் பழகாதவன், இத்தனைக்கும் மேலே அம்மாவின் கையால் செய்த சாப்பாட்டை தவிர வேற எந்த உணவையும் சாப்பிட்டு பழகாதவன்!! அப்படிப்பட்டவனை அத்தனை கார்டையும் வாங்கிக்கொண்டு, எந்த வகையிலும் அவன் இனி இந்த வீட்டின் பணத்தை எடுக்கமுடியாதப்படிக்கு செய்து ஒரு பூஜியமாக வெளியே அனுப்பிவிட்டார் தன் கணவர் என்று நினைத்து நினைத்து கண்ணீர் வடித்தார் அந்த தாய்.

விழியோரம் காதல் கசியுதேOpowieści tętniące życiem. Odkryj je teraz