INTRODUCTION (EDITED)

1.7K 17 3
                                    

இந்த கதையில் வரும் முக்கிய கதாபாத்திரம் எல்லாரையும் ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வந்துரலாம்.ஒரு ஊர்ல ஒரு தாத்தா பாட்டி இருந்தாங்க (என்னப்பா காலகாலமா இப்படி தான கதை சொல்லுவாங்க )

ராமன் -சீதாஇந்த ஊரல் செல்வாக்கு இருக்க முக்கிய குடும்பம் ,வயல் ,தோப்பு ,மில்,இப்படி வசதி உள்ள குடும்பம் .இவங்களுக்கு 1பையன் 2 பொண்ணு .

அவர் பையன் கண்ணன் தான் மூத்தவாரிசு .அடுத்து பிறந்தவர்கள் தான் கோகிலா,அவங்களுக்கு அப்புறம் செல்வி .

இவங்க 3 பேரையும் நன்றாக படிக்கவைக்க ஆசைபட்டாங்க.அவங்க ஆசைப்பட்ட மாதிரியே கண்ணனும் செல்வியும் நல்லா படிச்சாங்க,ஆனா பாருங்க கோகிலாக்கு படிப்பு புடிக்கலை ,ஏதோ உருண்டு பிரண்டு 12ஆவது வரை முடிச்சுட்டாங்க .

கோகிலாக்கு கல்யாண வயசு வந்ததும் மாப்பிள்ளை பாக்குறாங்க .ஆனா அவங்கள கஷ்டப்படுத்தாம நாம கோகிலா எனக்கு குணா மாமா பையன் ரமணனை புடிச்சுருக்குனு சொல்லவும் ஆகா இது நல்ல யோசனையா இருக்கே ,யாருக்கோ கட்டிக்குடுக்குறதுக்கு நாம அண்ணன் பையனுக்கு கட்டிக்குடுக்குறது நல்லதுன்னு சீதா பாட்டி சொல்ல ,பொண்டாட்டி சொன்ன சரியா தான் இருக்கும்னு ராமன் தாத்தாவும் சம்மதம் சொல்ல கோகிலா ரமணன் திருமணம் நல்லபடியா முடிஞ்சுது.

கோகிலா கல்யாணம் முடிஞ்சு 2 வருஷத்துல கண்ணனுக்கும் ரமணன் தங்கை பாவனிக்கும் கல்யாணம் நடந்துச்சு .சீதாப்பாட்டியோட அண்ணன் குணாவும் அந்த ஊர்ல வசதியானவாங்க தான்.இப்படி ரெண்டு பசங்களையும் சொந்தத்துல கட்டி வச்சாங்க ,ஆனா செல்வி அவங்ககூட படித்த மகேஷ் என்பவரை லவ் பண்ணாங்க .மகேஷோட பேமிலி சிட்டில இருக்க upper middle class family .கிராமத்துல இருக்க ராமன் சீதா அளவுக்கு பணக்காரங்க இல்லாட்டியும் படிப்பையும் உழைப்பை நம்புறவங்க.பொண்ணு ஆசைப்பட்டதால ராமனும் மகேஷ் செல்வி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாரு.ராமன் சீதா சம்மதிச்சு கல்யாணம் பண்ணிவைச்சாலும் கண்ணனுக்கு ஏனோ மகேஷ் மேல் அப்படி ஒன்னும் அபிப்ராயம் வந்தது இல்லை .சொந்தத்துல குடுத்து இருக்கலாம் என்று ஒரு எண்ணம் எப்போவும் இருக்கும்,இது அடிக்கடி அவர் பேச்சிலும் நடவடிக்கையிலும் காட்டவும் செய்து இருக்கார் .இதனால் செல்வி அதிகம் ஊருக்கு வருவது இல்லை ,மகேஷும் படிப்பையும் உழைப்பையும் வைத்து சில பல வருடங்களில் பெரிய லெவல் வளர்ந்துவிட்டார் ..என்று சிட்டியில் இருக்கும் பிரபல ABHINAV HOTEL CHAINS முதலாளி.

முதலில் கல்யாணமான கோகிலா ரமணன் தம்பதிக்கு இப்போ 28 வயசுல ஒரு மகன் இருக்கான் ,பேரு வாசுதேவ்.MSC அக்ரி பட்டதாரி ,அப்பா ரமணனோட மில் ,தோப்பு ,வயல் எல்லாத்தையும் பார்த்துக்குறது அவன் தான்.இவர் தங்க நாம கதாநாயகன்.பெத்தவங்களுக்கு ஓரே பையன் மட்டும் இல்ல பொறுப்பான பையனும்கூட.ஊர்லயே இருக்கான் ,படிப்பு முடிந்ததும் அப்பாவிற்கு துணையாக இருக்கான்,இவன் பொறுப்பு எடுத்தபிறகு படித்தபடிப்பை வைத்து விவசாயத்துல சில ஐடியா நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டுஇருக்கான் .

இரண்டாவதாக கல்யாணம் செய்த கண்ணன் பவானி தம்பதிக்கு ஒரு பொண்ணு ஒரு பையன்.பொண்ணு பேரு அனன்யா பையன் பேரு அபினவ்.இந்த அனன்யா தான் நம் ஹீரோயின்.

அனன்யா 24 வயசு அழகான பட்டாம்பூச்சி.அன்பான அழகான அறிவான ,முக்கியமா சுதந்திரமான பொண்ணு

அவளுக்கு ரொம்ப புடிச்சது அவளோட செல்வி அத்தையும் மகேஷ் மாமாவும்தான்.அதுக்கு காரணம் அவ அப்பா கண்ணன் செல்வி மகேஷ்க்கு காட்டும் பாரபட்சம் தான். பெண் எடுத்து பெண் கொடுத்ததால் கண்ணனிற்கு எப்போதும் கோகிலா ரமணன் ஒசத்தி.செல்வி தங்கச்சிதான் அவள் பாசம் பாசம் உண்டு தான் ஆனால் ரமணன் மேல் இருக்கும் ஓட்டுதல் மகேஷ் மேல் வரவில்லை .கணவன் மதிக்கப்படாத இடத்தில் நமக்கு என்ன வேலையென்று செல்வியும் ஒதுங்கிவிட்டால் இதன் காரணமாவே அனன்யாக்கு செல்வி அத்தை மகேஷ் மாமா தான் பிடிக்கும் .லீவு வந்தால் அங்க தான் இருப்பாள் .உன் drawing நல்லா இருக்கு,உன் கிரீடிவிட்டி நல்லா இருக்கு என்றுஎப்போதும் அவளை பாராட்டி,அவள் திறமைகளை ஊக்குவித்தது மகேஷ் தான்.பொண்ணு தைரியமா இண்டிபெண்டண்ட்டாக இருக்கவேண்டுமென்று அவளுக்கு அட்வைஸ் செய்து அவள் தைரியமான பொண்ணா வளர காரணமும் மகேஷ் தான்.அனன்யாக்கு ஜிவெள்ளரி டெசினிங்(JEWELLERY DESIGNING) மேல் அப்படி ஒரு passion.12த் முடித்ததும் மாமா கூட பேசி விசாரித்து அதற்கேற்ற படிப்பை படிக்க முடிவெடுத்தால் .பொண்ணு ரொம்ப ஆசைப்பட்டதால் கண்ணனும் சம்மதம் தெரிவித்து அவபடிக்க விரும்பின NEW YORK இல் இருக்கும் Universityகே ,அனுப்பி வைத்தார்

அங்கேயே 3 வருஷம் இளங்கலை பட்டம் முடித்து இப்போ முதுகலை பட்டம் இறுதி ஆண்டு படிக்கிறாள் .

மனம் ஏங்குதேWhere stories live. Discover now