அனன்யா 3 நாளில் newyork செல்கிறாள்,அனைவருக்கும் வருத்தம் இருந்தாலும் அதை யாரும் வெளிக்காட்டாமல் இருந்தார்கள். பாட்டி அனன்யா விற்கு பிடித்த மாங்காய் ஊறுகாய் வத்தல் முறுக்கு செய்து கொண்டிருந்தார். இதெல்லாம் எனக்கு வேணாம் பாட்டி அங்கேயும் இதெல்லாம் கிடைக்கும் என்ன சொன்னாலும் கேட்காமல் இதையெல்லாம் பேக் பண்ணினார்கள். அனன்யாவின் அறைக்கு வந்தான் வாசு.
வாசு :குட்டிமா ஃப்ரீயா இருக்கியா
அனன்யா: சொல்லுங்க மாமா சும்மா தான் இருக்கேன்.
வாசு : பேக்கிங் ஓவரா எதுவும் எடுத்து வைக்கணுமா??
அனன்யா: இல்லை மாமா,எல்லாம் done.
வாசு: சரிடா , அப்போ என் கூட கொஞ்சம் வெளிய வரியா?
அனன்யா: எங்க மாமா ?
வாசு :சொன்னா தான் வருவியா ??
அனன்யா: அப்படியெல்லாம் இல்லை மாமா, போலம் வாங்க, ஆனா bikeல தான் போகணும்.எனக்கு உங்க கூட bikela போகனும்னு ஆசையா இருக்கு.
வாசு: இளவரசி பேச்சுக்கு மறுபேச்சு ஏது??bikeலயே போகலாம்.
அவர்கள் வந்த இடம் நகை கடை.
அனன்யா :இங்க ஏன் மாமா வந்து இருக்கோம்?
வாசு: உனக்கு என் காசில் ஒரு பரிசு வாங்கி தர ஆசை படுறேன், வேண்டாம் சொல்லக்கூடாது..வா என்று அவளை கடையின் உள் அழைத்து சென்றான்.நேராக செயின் பகுதிக்கு சென்றார்கள்.உனக்கு என்ன பிடிச்சு இருக்கு பாருடா என்று சொன்னான்."நீங்களே பார்த்து சொல்லுங்க மாமா" என்று அவனிடம் பொறுப்பை தந்தால் அவள்.சுற்றி பார்த்ததில் அழகான செயின் ஒன்று வாசு கண்ணில் பட்டது.மெலிதாக இருந்த அந்த செயின் டாலரில் இருந்த சிறிய பட்டாம்பூச்சி அவனை ஈர்துவிட்டது.அனன்யாவிர்கு இது பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தவன் அதையே வங்கிவிட்டான்.
அனன்யாவிர்கும் அந்த செயின் பிடித்து விட்டது.செயின் வாங்கிவிட்டு அவளை அருகே இருந்த பூங்காவிற்கு அழைத்து சென்றான்.சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.வாசு ஏதோ யோசனையில் இருக்கிறான் என்று புரிந்து கொண்டு அவன் பேச காத்து இருந்தாள்.அவள் எண்ணியது போல் வாசுவே சிறுது நேரத்தில் பேசினான்.
YOU ARE READING
மனம் ஏங்குதே
Romanceவாசு :அது ...அன்னயா ஏன்' வெளிய வந்த? அனன்யா :ஏன் உங்களுக்கு தெரியாதா?உங்க அம்மாக்கு என்ன தான் பிரச்சன்னை?ஏன் எப்போ பார் அடுத்தவங்க விஷயத்துல வராங்க?எல்லா இடத்துலயும் நாட்டாமை பண்ணியே ஆகணுமா?எல்லார் வாழ்க்கையும் அவங்க ஆட்டிவைக்கணுமா?எல்லா விஷயத்துலயு...