அபியுடன் பேசிய பின்பு அனன்யாவிற்க்கு ஒரு தெளிவு வந்தது,அவள் தனியாக யோசித்துக்கொண்டு இருந்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை.நேராக வாசுவிடம் பேசினால் நிச்சயம் அவள் தயகத்திற்கும் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.எனவே அன்று மாலையே வாசுவிற்கு அழைத்தும் விட்டால்.
அவள் அழைபிற்காகவே காத்து இருந்தது போல் உடனே அலைபேசி எடுத்துவிட்டான் வாசு,"சொல்லு குட்டிமா,உன்னை பத்திதான் நெனைச்சேன்,நீயே கூப்பிடுற "
"என்னை பத்தி அப்படி என்ன நினைசீங்க??சும்மா ஒரு ரிங்கல எடுத்துட்டு ஐஸ் வைக்காதீங்க மாமா"
"ஐஸ் வைக்கிரனா??உண்மைக்கு மதிப்பு இல்லாம போயிடுச்சு குட்டிமா , சரி இதை விடு, நீ கால் பண்ண விஷயத்தை சொல்லுடா".
"நீங்க யோசிக்க சொன்னீங்களே,அந்த விஷயத்தை பத்தி பேசணும்.மாமா"
"எந்த விஷயம் குட்டிமா,எனக்கு எதும் நியாபகம் இல்லயே??"
"ஓஹ உங்களுக்கு நியாபகமில்லைய?சரி நல்லது அப்போ விட்டுருங்க, நான் அப்புறம் பேசுறேன் "
"ஒய் ஒய்,சும்மா கிண்டல் பண்ணேன், டென்ஷன் ஆகாத,சொல்லு என்ன முடிவு பண்ணியிருக்க?"
"எனக்கு ஒரே குழப்பமா இருக்கு மாமா,இது சரியவருமா என்று பயமா இருக்கு,தனியா குழம்புரத விட உங்ககிட்ட பேசினா கொஞ்சம் தெளிவாகும் நெனைச்சேன், அதான் உங்ககிட்ட பேசி முடிவெடுக்கலாம் கால்பணிடேன்"
என்ன குழப்பம் சொல்லு ,ரெண்டுபேரும் சேர்ந்து ஆலோசிக்கலாம்."
"எனக்கு உங்கள பிடிச்சுயிருக்கு மாமா,எனக்கு அதில் எந்த சந்தேகமுமில்லை ,இந்தியால இருந்து இங்க வந்தபின் அவ்ளோ வேலை பிஸிலேயும் உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன், இந்த அளவுக்கு யாரையும் நான் மிஸ் பண்ணுது இல்லை.இதுக்கு முன்னாடி காதல்,கல்யாணம்னு நான் யோசிச்சதும் இல்லை.நீங்க என்னை விரும்புறேன் சொன்ன பிறகு தான் யோசிக்குறேன்,யோசிக்கும்போது தான் தெரியுது நான் ரொம்ப உங்களை சார்ந்து இருந்துட்டேன் ,நானும் உங்களை விரும்பியிருக்கேன் ,ஆனா அது வெறும் பாசம்னு நினைச்சுட்டேன் ,ஆனா வேறுயாரையும் அந்தமாரி நேசிப்பேனானு நினைத்தால் கண்டிப்பா முடியாது .இது சினிமால வருவதுமாதிரி சொல்லமுடியலை ,ஆனா என்மனசுல உங்களுக்கு குடுத்த இடத்தை யாருக்கும் கொடுக்கமாட்டேன் ,உங்கமனசுலயும் எனக்கு இருக்க இடத்தை யாருக்கும் விட்டுகுடுக்க மாட்டேன்னு புரிஞ்சுக்கிட்டேன் .ஆனா பிடிச்சுயிருக்குறது வேற ,வாழ்க்கை வேறல்லயா ?"எனக்கு இங்க தன ரொம்ப குழப்பமா இருக்கு "
![](https://img.wattpad.com/cover/271508517-288-k195569.jpg)
YOU ARE READING
மனம் ஏங்குதே
Romanceவாசு :அது ...அன்னயா ஏன்' வெளிய வந்த? அனன்யா :ஏன் உங்களுக்கு தெரியாதா?உங்க அம்மாக்கு என்ன தான் பிரச்சன்னை?ஏன் எப்போ பார் அடுத்தவங்க விஷயத்துல வராங்க?எல்லா இடத்துலயும் நாட்டாமை பண்ணியே ஆகணுமா?எல்லார் வாழ்க்கையும் அவங்க ஆட்டிவைக்கணுமா?எல்லா விஷயத்துலயு...