CHAPTER 12

464 15 3
                                    


அனையவரும் பேசி சிரித்து மனமும் வயிறும் நிறைந்து மகிழ்வுடன் அன்று இரவை கழித்தனர்.இது தான் தாத்தா ஆசைப்பட்டது .கடைசி காலத்தில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக சில நாட்கள் கழிக்க வேண்டும்.இன்று தாத்தா மிகவும் மகிழ்வுடன் இருந்தார்.அனைவரும் பேசி கொண்டு இருக்க இரவு 12 நெருங்கியது .பேச்சிலும் விளையாட்டிலும் யாரும் நேரம் போனதை கவனிக்கவில்லை.அனன்யா வாசுவிடம் கண்ஜாடை காட்டினாள்,அதை புரிந்து கொண்ட வாசு தாத்தா கவனத்தை அவன் பக்கம் திருப்பி ஏதோ பேசினான்.யாரும் கவனிக்காது அனன்யாவும் அபினவும் வீட்டிற்குள் சென்றனர்.

திடீர் என்று அங்கே அலங்கரித்த மின்விளக்குகள் அணைந்தது.அனைவரும் அமைதியாகி என்னானது என்று பார்க்க அனன்யா கையில் ஒரு கேக் ,அதில் ஒளிரும் ஒரு மெழுகுவர்த்தி ,அதை எடுத்து வந்து மேஜையில் வைக்க பேரப்பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக "ஹாப்பி பர்த்டே தாத்தா "என்று வாழ்த்தினார்கள்.அவர்கள் வாழ்த்தி முடிக்கவும் மின்விளக்குகள் எறியவும் சரியாக இருந்தது .தாத்தா கண்கள் கலங்கிவிட்டார் பேரப்பிள்ளைகள் பாசத்தில்.ரொம்ப பிறகு கேக் வெட்டி சாப்பிட்டு அனைவரும் உறங்க சென்று விட்டார்கள்.

அடுத்தநாள் காலை அழகாகவும் பரபரப்பாகவும் விடிந்தது.அனைவரும் தயாராகி வாசு வீட்டிற்கு சென்றார்கள்.அங்கு இருந்து அனைவரும் ஒரே வேனில் அவர்கள் குலதெய்வம் கோவில் சென்றார்கள்.தாத்தாவின் பிறந்தநாள் கோவில் சென்று பூஜை செய்வது இவர்கள் பழக்கம்.தனித்தனியாக செல்லாமல் ஒரே வேனில் சென்றார்கள்.தாத்தா பாட்டி ,கோகிலா ரமணன்,கண்ணன் பவானி ,செல்வி மகேஷ் ,வாசு கோபி ,அனன்யா அபினவ் கீதா அபிஷேக் என்று அமர்ந்தார்கள்.அனைவரும் ஜோடியா இருந்தார்கள் .அனன்யா அவள் அருகில் அபினவ் கீதா அபிஷேக் என்றுகடைசி சீட்டில் இருந்தார்கள் வாசு அவர்களுக்கு முன் சீட்டில் கோபியுடன் இருந்தான் .

இதை பார்த்த கோகிலா எரிச்சல் அடைந்தாள் .கண்ணன் பாவனியிடம் மெல்ல

மனம் ஏங்குதேDonde viven las historias. Descúbrelo ahora