CHAPTER 18

384 11 4
                                    

மாடியில் தன் அறையில் இருந்த அனன்யா தலையை கையில் பிடித்து கொண்டு இருந்தால் கடந்த 2 வாரங்களாக இருந்த மகிழ்ச்சி அனைத்தும் தொலைந்துவிட்டது போல் இருந்தது ,ஏன்டா இந்தியா வந்தோம் என்று வருந்தினாள்.எப்படி இந்த பிரெச்சனையை சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பினாள்.கடைசியாக பாட்டியிடம் பேசி பார்ப்போம் ,அப்படி அவர் சமாதானம் ஆகாமல் திருமணத்தில் முடிவாக இருந்தால் நாளை விடிந்தவுடன் நியூயார்க் சென்று விடலாம் என்று தீர்மானித்தால் .பாட்டி சம்மதித்தாலும் சம்மதிக்காவிட்டாலும் இங்கு இனி இங்கு இருந்தால் நல்லது இல்லை ,உடனே புறப்படவேண்டும் என்று முடிவு செய்தால் அனன்யா .

பாட்டியிடம் பேச அவர் அறைக்கு சென்றால் ,அங்கே பவானி செல்வியை அவமானப்படுத்தி பேசியதை கேட்டவள் காளியாக மாறிவிட்டால் .அன்னை ஸ்தானத்தில் இருந்த செல்வி அவமதிக்க படுவதை பொறுத்துக்கொள்ளமுடிவில்லை அனன்யாவிற்கு.என்றும் அன்னை என்ற ஸ்தானத்தில் இருந்தது செல்வி தானே.அனன்யா பெரியவள் ஆனா போது மிகவும் பயந்து இருந்தால்,செல்வி தான் அவளை அரவணைத்து ஆறுதல் கூறி ,அவளுக்கு துணையாக இருந்து பார்த்துக்கொண்டாள் ,பவானி அப்போது ஊரிலே இல்லை,வீட்டிற்கு வந்த பின்பும் அனன்யாவை அதை தொடாதே இதை தொடாதே,என் சொந்தத்தில் முக்கிய கல்யாணம் இருக்கு கண்டிப்பாக போகவேண்டும் இப்போதுதானா இவள் பெரியவள் ஆகா வேண்டும் என்று கடுகாடுதலே தவிர ஆறுதல் வார்த்தையோ ,வலியிலும் பயத்திலும் இருக்கும் சிறு பெண்ணுக்கு துணையாகவோ நிற்கவில்லை.

பவானி செல்வியை சொத்துக்கு அசைபடுறியே அசிங்கமா இல்லை என்று கேட்கவும் பொறுக்க முடியாமல் அருகில் இருந்த கண்ணாடி அலங்கார பொருளை பவானியின் கால் அருகில் வீசினால் ,அவள் இருந்த மனநிலைக்கு ஆடு பவானியை தாக்கி இருந்தாலும் கவலை பட்டு இருக்க மாட்டாள்.சொந்த பெண்ணிடம் அன்புகாட்ட தெரியாதவர்கள் ,ஒருநாளும் இவளிடம் பேருக்கு கூட அன்பு காட்டாதவர்கள் ,இவளுக்கு துணை நின்றவர்களை அவமதிப்பதை கண்டு பொங்கிவிட்டால் .இவர்களை இப்படியே விட்டு வைப்பது சரிப்படாது ,அனைத்தையும் இன்றே பேசிமுடித்திடவேண்டும் என்று நினைத்தாள் ஆம் அனைத்தையும் இன்றே இப்பொழுதே முடித்து விடவேண்டும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள் அனன்யா .

மனம் ஏங்குதேWhere stories live. Discover now