CHAPTER 2

599 16 1
                                    

வாசு POV

"அண்ணா தோட்டம் சுத்தம் பண்ணி, களையெடுத்துடுங்க, அந்த நெல்லிமரம் காய்நிறைய இருக்கு,கொஞ்சம் எடுத்துவையுங்க,பின்னால இருக்க கிணருக்கு மூடிபோட்டி பூட்டு போடுங்க.மாட்டு கொட்டகை சுத்தம் செஞ்சு சாம்பிராணி இனி ரெண்டு வேலை போடசொல்லுங்க.ரவி கிட்ட சொல்லி வீட்டுல எல்லா ரூம்லயும் லைட் fan

ஒருவாட்டி சரிபார்க்க சொல்லுங்க"என்று வேலுவிடம் வேலை சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்றேன் வாசு.

நாளைக்கு எப்படியும் எல்லாரும் ஊருக்கு வந்துருவங்க,தாத்தா எல்லாரும் கண்டிப்பா வரணும்னு சொல்லிட்டாரு.வீடு ஒரே சிரிப்பும் சந்தோசமா இருக்கும். நெனச்சலே சந்தோசமா இருக்கு.கண்ணன் மாமா அனன்யா உருக்கு வராணு சொன்னாரு.வெளிநாட்டுக்கு படிக்கப்போன அனன்யா 4 வருசம் கழிச்சு இப்போ தான் வரா.எங்க யார்கூடவும் அவ பழகுனது கிடையாது. எப்போவுமே தள்ளியே இருப்பா,அதிகம் பேச மாட்டா,சிரிக்க மாட்டா.

ஆனா செல்வி சித்தி வீட்டுல தான் எப்போவுமே இருப்பா.அவங்க பசங்க கூடா சந்தோசமா விளையாடுவா,நான் அவங்கள எங்கக்கூட விளையாட கூப்பிட அவங்க 3 பேரும் வரவே மாட்டாங்க.எனக்கும் அனன்யா கூட பேசணும்,விளையாட தோணும் ஆனா அவ என்னை பாக்கக்கூட மாட்டா.

அன்னையா போறந்தபோ ஹாஸ்பிடல் பொய் பார்த்தோம். Rose கலர்ல அழகா பொம்மை மாரி இருந்தா, நான் போய் அந்த பாப்பா கன்னத்தை தொட்டு பார்த்தேன், அவ குண்டு கண்ணை திறந்து முழுச்சி முழுச்சி பார்த்தா.எனக்கு அனன்யா பாபா ரொம்ப புடிச்சு இருந்துச்சு. அன்று வீட்டுக்கு போகாம அத்தை கூடவே இருந்தேன்.அவ குட்டி பாப்பாவா இருக்க வரை நான் தான் அவகூட விளையாடுவேன்.எனக்கு அத்தை மாமா எப்போ உருக்கு வருவாங்க,எப்போ பாப்பாகூட விலயடலாம்னு காத்து இருப்பேன்.வருஷம் ஆக ஆக அன்னையா ரொம்ப அமைதியாகிட்ட,பேசமாட்டா,சிரிக்கமாட்டா,ஓரமா நிப்பா.என்னை பார்த்த அங்க நிக்கவே மாட்டா,தூரம் போய்டுவா.ஆனாஅனன்யா தம்பி அபிஷேக் என்கூடவே சுத்துவான்,அவனுக்கும் எனக்கும் ஒரே நாள் தான் பிறந்தநாள்.அவன் என்மேல ரொம்ப பாசமா இருப்பான் மாமா மாமானு பின்னாடியே சுத்துவான்.இதுலாம் நெனச்சுட்டே வீடு வந்து சேர்ந்துட்டேன்.

மனம் ஏங்குதேWhere stories live. Discover now