தாத்தாவை நினைத்து எல்லாரும் கவலையில் உண்ணாமல் கூட இருக்க ,அனன்யா தான் அனைவரையும் வற்புறுத்தி சாப்பிட செய்தல்,பாட்டிக்கு மாத்திரை குடுத்து அவர் கூடவே இருட்னது பார்த்து கொண்டால்.அடுத்தநாள் விடிந்தும் ஆண்ட வீட்டின் நிலை மாறவே இல்லை.மருத்துவமனை சென்றாலும் ICU வில் இருக்கும் தாத்தாவை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை.மருத்துவமனையில் இரவு தங்கியிருந்த கண்ணனும்,வாசுவும் வீட்டுக்கு வந்து குளித்து சாப்பிட்டு மீண்டும் மருத்துவமனை செல்ல தயாராகினர்.
அப்போது ஹாலுக்கு வந்த கோகிலா அவள் தாயிடம் "அம்மா ,அப்பா பிழைப்பது கஷ்டம் சொல்லுறாங்க,அப்பா இருக்கும்போதே வாசுக்கு கல்யாணம் பண்ணிடலாம் தோணுது அம்மா ,தரகர் கிட்ட நிலைமை சொல்லி பொண்ணு பார்க்க சொல்லலாம் அம்மா :என்று கூறினால் .சீதா பாட்டிக்கும் கணவன் ஆசைப்பட்டதும் அதானே ,வாசுவிற்கு கல்யாணம் செய்யவேண்டும் என்றதும் எவ்வளவு பரபரப்பாக இருந்தார் ?அவர் இருக்கையிலேயே இந்த வீட்டின் முதல் பேர பிள்ளையின் திருமணம் நடக்கட்டும் என்று எண்ணி சம்மதம் சொன்னார்.
"தரகர் கிட்ட பேசு,நிலைமையை சொல்லு,பொண்ணு வந்த மட்டும் போதும் ,காசு பணத்துக்கு நமக்கு என்ன கொறச்சல் இருக்கு ,நல்ல குணமான பொண்ணா இருந்த மட்டும் போதும் சொல்லு ,எவ்வளவு சீக்கிரம் பார்க்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பார்க்க சொல்லு " என்றார் .
பெண் பார்க்கும் படலம் தரகர் மூலம் பரபரப்பாக்க நடந்தது.அவசர திருமணம் என்றதும் சிலர் தயங்கினர்.வாசுவிற்கு இது தெரியவந்த போது இப்போ இது எல்லாம் தேவையா பாட்டி ?தாத்தா முதல் சரியாகட்டும் என்று கூறினான் யாரும் கேட்கவில்லை.தாத்தாவிற்கு இப்படி ஆனதால் அனன்யாவும் நியூயார்க் போவதை தள்ளி வைத்து விட்டால் ,கம்பனிக்கு அவள் நிலைமையை கூற அவர்களும் ஆரம்பகாலத்தில் இங்கு நீ இருக்க அவசியம் இல்லை,ஆனாலும் சீக்கிரம் வர சொல்லி சொன்னார்கள்.
தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட 5 நாள் தரகர் வீட்டிற்கு வந்து அம்மா நீங்க சொன்ன மாரி அவசரமா கல்யாணம் சொன்ன எல்லாரும் தயங்குறாங்க ,வெளியில் சொன்னு எடுத்த சரிப்படாது ,உங்க சொந்தத்துலயே பாருங்க என்று சொல்லி சென்று விட்டார் .ரமணன் சொந்தத்தில் அவருக்கு ஒரு தங்கை மீனாட்சி உண்டு',அவர்கள் பண வசதி இல்லாமல் இருந்தபோது ரமணன் தான் உதவினார் .அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண் இருந்தால் ,அவள் படித்து வேளை தேடி கொண்டு இருந்தால் .மீனாட்சியின் பெண்ணை பேசிப்பார்த்தால் என்ன என்று கோகிலா கேட்க ரமணன் சரி என்று கூறி மீனாட்சி வீட்டிற்கு சென்றார்கள் .செல்வி மகேஷ் தவிர்த்து பெரியவள் அனைவரும் மட்டும் சென்றார்கள் .மீனாட்சிக்கு ஒன்றும் புரியவில்லை.
YOU ARE READING
மனம் ஏங்குதே
Romanceவாசு :அது ...அன்னயா ஏன்' வெளிய வந்த? அனன்யா :ஏன் உங்களுக்கு தெரியாதா?உங்க அம்மாக்கு என்ன தான் பிரச்சன்னை?ஏன் எப்போ பார் அடுத்தவங்க விஷயத்துல வராங்க?எல்லா இடத்துலயும் நாட்டாமை பண்ணியே ஆகணுமா?எல்லார் வாழ்க்கையும் அவங்க ஆட்டிவைக்கணுமா?எல்லா விஷயத்துலயு...