CHAPTER 28

819 17 8
                                    

தாத்தாவுடன் இரவு தங்கிக் கொள்கிறேன் என்று சொன்ன வாசு வரவில்லை. தலை வலியின் காரணமாக நன்றாக உறங்கியவன் மறுநாள் காலை 10 மணிக்கு தான் எழுந்தான். தாத்தாவை டிஸ்சார்ஜ் செய்வது வீட்டுக்கு அழைத்து வந்தான். இடையில் விட்டுப் போயிருந்த மில் வேலையிலும் வயலில் நடந்த அறுவடை வேலையிலும் மும்முரமாக இருந்தான் .

இப்படி இரண்டு நாட்கள் சென்றுவிட ஒருநாள் மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தவன் தாத்தாவும் பாட்டியும் பேசிக் கொள்ளாத இருப்பதை அப்போது தான் கவனித்தான் .அதுவும்கூட அனன்யா சொல்லித்தான் பார்த்தான். வழக்கம்போல் மதிய உணவை முடித்துக் கொண்டவன் தாத்தாவின் அறைக்கு சென்று தாத்தாவின் காலடியில் அமர்ந்து கொண்டான். தாத்தாவின் காலை மெல்ல பிடித்தவன்" தாத்தா இப்போ உடம்பு பரவா இல்லையா?? மாத்திரை எல்லாம் சரியா சாப்பிட்டீங்களா??

தாத்தா :அதெல்லாம் சாப்பிட்டேன் பா, ஒரு தடவை உடம்பு சரி இல்லாம போனதுக்கு என்ன நடந்ததுன்னு கேட்டன் இல்ல ,மறுபடி அந்த மாதிரி ஆகாம தடுக்க உடம்பு தான் பார்க்கணும். அதனால மாத்திரை எல்லாம் சரியாத்தான் போட்டு கிட்டு இருக்கேன் நீ ஒன்னும் பயப்படாத.

வாசு :என்ன தாத்தா இப்படிலாம் பேசுறீங்க நீங்க நல்லா இருக்கணும் தானே சொல்றேன்

தாத்தா :அதெல்லாம் புரியுதுடா, நான் பார்த்துகிறேன் ,நீ வருத்தப்படாதே.

தாத்தா குதிக்காட்டும்படி பேசியது பாட்டிக்கு வலித்தது லேசாக கண் கலங்கினார் ஆனால் காட்டி கொள்ள வில்லை அதை வாசு கவனித்து விட்டான்.

வாசு: தாத்தா நடந்தது நடந்து முடிஞ்சு போச்சு. அதுக்காக பாட்டி மேல கோச்சுக்காதீங்க, அவங்க சந்தர்ப்ப சூழ்நிலையால் அப்படி பண்ணிட்டாங்க .பாட்டி கிட்ட கொஞ்சம் பேசுங்க தாத்தா.

தாத்தா: நான் எப்படா என் பொண்டாட்டி கிட்ட கோபப்பட்டேன்

வாசு :கோவம் இல்லையா அப்போ ஏன் பேசல?

தாத்தா :கோவம் எல்லாம் இல்லை ,வருத்தம்தான் .என் மேல இருக்கா அன்புள்ள எனது ஆசையை நிறைவேற்றும் நினைச்சு அப்படி பண்ணிட்டா .அதில் அவளுடைய அன்பு எனக்கு புரியுது ,ஆனா அதுக்காக என் பேர பிள்ளைங்க கஷ்டப்பட்டால் அது எனக்கு விருப்பமா யோசிக்காம விட்டுட்டா அதுதான் வருத்தம்.

மனம் ஏங்குதேKde žijí příběhy. Začni objevovat