வாசு POV
அனன்யா அமைதியானவள்,யாருடனும் ஒட்டாமல் ஒதுங்கி இருப்பவள் என்று நினைத்து இருந்தேன் ,இன்று அவளுடன் பேசிய பின்பு அவளை பாசத்திற்கு ஏங்குகின்ற ஒரு குழந்தையாக தான் பார்க்க தோன்றியது.அன்புக்கு ஏங்கி இருந்தவளுக்கு அன்பு குடுத்து அவளை செல்வி சித்தி அரவணைத்து கொண்டார் ,இல்லையென்றால் அவள் நிலைமை என்னவாகி இருக்கும்.நாங்கள் மற்றவர்கள் இருந்த இடத்திற்கு வந்தோம்.
அனன்யாவின் சிவந்த கண்களை பார்த்த அபினவ் பதறி எழுந்து
அபினவ் "என்னாச்சு அனன்யா?அழுதியா?"
அனன்யா :அதுலாம் இல்ல அபி,சும்மா பேசிட்டு இருந்தோம்.அவ்ளோ தான்
அபினவ் :எல்லாம் ஓகே தானே பேபி?
அனன்யா :வாங்க எல்லாம் உள்ள போலாம் .பசிக்குது .அபி கார்லா FOOD BASKETS இருக்கு எடுத்துட்டு வா
வாசு :நீங்களும் உள்ள போங்க ,நானும் கோபியும் எடுத்துட்டு வரோம்
எல்லாரும் உள்ள செல்ல வாசுவிடம் வந்த கோபி
கோபி :என்னடா என்னாச்சு ?ஏன் அந்த புள்ளஅழுத்துச்சு ?உன் முகம் ஏன் இப்படி இருக்கு .?
வாசு :இல்லடா ,அவ மனசு விட்டு என்கிட்ட பேசினா .நடந்த அனைத்தும் வாசு கோபியிடம் கூறுகிறான்.
கோபி :பாவம் ட அந்த புள்ளை.இப்படியாத பெத்தவங்க இருப்பாங்க?உங்கிட்ட உன் மாமா பழகுறத பார்த்து அவரை என்னமோ நெனச்சுட்டேன்டா.
வாசு :எனக்கும் அதிர்ச்சியா தான் இருக்கு கோபி.எதுனால மாமா அத்தை இவள் மேல் இப்படி பாரபட்சம் காட்டியிருப்பாங்க ??
கோபி :டேய் என்ன காரணமா இருந்தாலும் பெத்தவங்க அப்படி இருக்க கூடாதுடா .புள்ளைங்களுக்கு எல்லாமே அவங்க அப்பா அம்மா தான்.அவங்க தான் பசங்கள பார்த்துக்கணும்.அவங்களே அவளை ஒதுக்குனா அவளுக்கு ஏதாச்சு பிரச்னை வந்தா கூட அவ யாருகிட்ட உதவிக்கு போயிருப்பா ?இதுலாம் ரொம்ப தப்பு .பாவம் அந்த புள்ளை .
YOU ARE READING
மனம் ஏங்குதே
Romanceவாசு :அது ...அன்னயா ஏன்' வெளிய வந்த? அனன்யா :ஏன் உங்களுக்கு தெரியாதா?உங்க அம்மாக்கு என்ன தான் பிரச்சன்னை?ஏன் எப்போ பார் அடுத்தவங்க விஷயத்துல வராங்க?எல்லா இடத்துலயும் நாட்டாமை பண்ணியே ஆகணுமா?எல்லார் வாழ்க்கையும் அவங்க ஆட்டிவைக்கணுமா?எல்லா விஷயத்துலயு...