CHAPTER 8

460 12 8
                                    


வாசு வீட்டில்

அனன்யா கோவமாக சென்று விட்ட பிறகு அபிஷேக்கும் முறைத்து கொண்டு சென்று விட்டான்.யாரும் ஏதும் பேசாமல் அவர் அவர் அறைக்கு சென்று விட்டனர்.ராமன் தாத்தாவும் சீதா பாட்டியும் வீட்டின் பின் தோட்டத்தில் அமர்ந்து யோசனையில் இருந்தார்கள்.அங்கு வந்த வாசு அவரகள் மனநிலை புரிந்து கொண்டு ராமன் தாத்தா அருகில் அமர்ந்து அவர் கால்களை மெல்ல பிடித்து விட்டான்.இது அவன் வழக்கமாக செய்வது தான் .அவனை பார்த்து சிரித்த தாத்தா பெருமூச்சு ஒன்று விட்டார்.

தாத்தா : "எல்லாரும் ஒன்னசேர்ந்து சந்தோசமா இருக்கணும்னு தான் இந்த வயசுல பெருசா ஒரு வீடு காட்டினேன் ஆனா வந்து 3 நாள் ஆகியும் ஒரு சந்தோஷமும் இல்லையே ,ஒன்னா சேர்ந்தாலே ஏதாச்சு விவாதம் தான் வருது .வயசான காலத்துல புள்ளைங்க பேரபசங்ககூட சந்தோசமா இருக்க நெனைச்சது குற்றமா ?

பாட்டி :அதுலாம் குற்றம் இல்லங்க,கோகிலாவை கண்டிச்சு வழக்காதது தான் தப்பு.

வாசு :என்ன பாட்டி இப்படி சொல்லுறீங்க ?

பாட்டி :வாசு ,உன் அம்மாவை நான் இப்படி சொல்லுறேன்னு நெனைக்காத ,அவ முதல்ல என் பொண்ணு அப்புறம் தான் உனக்கு அம்மா.அவளை சரியா கண்டிச்சுவளர்த்துருக்கணும் , எல்லா விஷயத்துலயும் நாட்டாமை பண்ணுறா.ஏற்கனவே கண்ணன் அவ ஆட்டி வசமாரி ஆடுறன்.அவன் புள்ளைங்க வாழ்க்கைக்கு உங்கம்மா ஏன்டா முடிவு எடுக்கணும் ?வாசு நீ படிச்சவன் ,நாலு இடம் போறவன் ,நீயே சொல்லு அனன்யா வந்ததுல இருந்து உன் அம்மா எப்புடி நடந்துக்குறா?

வாசு :ஆனா அனன்யா இப்போமே நம்ம கூடலாம் ஒட்டி இருந்ததே இல்லையே பாட்டி.

பாட்டி :இருக்கட்டும்டா ,அடுக்காக அவ எங்க படிக்கணும் ,யாருக்கு என்ன வாங்கித்தரேனும் இதுலாம் உன் அம்மா ஏன் முடிவு பண்ணனும் சொல்லு .

தாத்தா :விடு சீதா ,நாம அப்புறமா அனன்யாவை தனியா பார்த்து பேசிப்போம் ,அவ நல்ல குழந்தை ,புரிஞ்சுப்பா.வாசு நீ கோகிலாகிட்ட பேசி அவளை அமைதியா இருக்க சொல்லு.நாளைக்கு எல்லாரும் டவுன் போய் ,துணி நகை வாங்கலாம் (ஆமா மக்களே கதைல COVID இல்ல )

மனம் ஏங்குதேWhere stories live. Discover now