தாத்தாவைப் பார்க்க கண்ணனும் வாசுவும் மட்டும் உள்ளே சென்றார்கள் அவர்களை பார்த்த தாத்தா "எல்லாரும் எப்படி இருக்கீங்க ரொம்ப பயமுறுத்திட்டேனா ??"என்று கேட்டார்
வாசு:"அப்படியெல்லாம் இல்லை தாத்தா , உங்களை பத்தின கவலை தவிர்த்து வேற ஒன்னுமில்லை குறை இல்லை ,எல்லாரும் நல்லா தான் இருக்கோம் "
தாத்தா :சரி மத்தவங்க எல்லாம் எங்கப்பா எல்லாரையும் வர சொல்லு நான் எல்லாரையும் பாக்கணும் .
வாசு :அது டாக்டர் யாராவது இரண்டு பேர் தான் வரணும் னு சொன்னாங்க தாத்தா
அப்போது தாத்தாவை வேறு தனி அறைக்கு மாற்ற நர்ஸ் வந்தார் "சார் உங்க தாத்தாவை தனி ரூமுக்கு மாத்தணும், அப்புறம் நீங்க எல்லாரும் கூட பாருங்க ஆனா ரொம்ப டிஸ்டர்ப் பண்ணாதீங்க"
வாசு :ரொம்ப நன்றி சிஸ்டர்.
தாத்தாவை வேறு அறைக்கு மாற்றி அனைத்தையும் சரி செய்ய சிறிது நேரம் ஆனது அதற்குள் மருந்தின் வீரியத்தால் தாத்தா சற்று உறங்கியும் விட்டார் ,மீண்டும் தாத்தா கண் விழிக்கையில் மாலை ஆகிவிட்டது தாத்தா கண்விழித்ததும் அனைவரையும் வரச்சொன்னார் தாத்தாவைப் பார்த்ததும் அபிஷேக்கும் கீதாவும் ஓடி சென்று அவர் கட்டில் அருகே நின்று கொண்டார்கள்.
தாத்தா அறையில் இருந்த அனைவரையும் ஒருமுறை பார்த்தார் ,அனைவரும் களைப்பும் சோர்வும் ஒன்றுசேர இருந்தார்கள் .
தாத்தா :கண்ணா ,அம்மா எங்க? கோகிலா எங்க ?ரெண்டு பேரையும் காணோம் ?கண்ணன் :அது அப்பா அம்மா ...அம்மா ...கோகிலா...என்ன சொல்வது என்று தெரியாது திக்கி தவித்தார் .
யாரும் எதுவும் சொல்லாமல் மௌனம் காக்க " கோவில் போய் இருக்காங்க அப்பா "என்று சொன்னார்.
அனைவர் முகத்திலும் இருக்கும் ஒரு இருக்கம் பொய் சொல்கிறார்கள் ஏதோ நடந்திருக்கிறது என்று உணர்த்தியது அனைவரும் அனைவரையும் ஒரு முறை கூர்ந்து கவனித்தார் அப்போதுதான் வாசுவும் அனன்யாவும் திருமணக்கோலத்தில் நிற்பதைப் பார்த்தார் தன் மருமகன் மகேஷ் அருகில் அழைத்தார். தாத்தாவிற்கு என்றுமே மகேஷ் மீது பெரிய மதிப்பு இருந்தது உண்டு .படிப்பையும் தன் உழைப்பை மட்டுமே நம்பி இன்று பெரிய அளவில் வளர்ந்து இருக்கும் மகேஷின் மீது தனிப்பட்ட மரியாதையும் நம்பிக்கையும் இருந்தது. மகேஷின் கையை பிடித்துக்கொண்டு" மாப்பிள்ளை நீங்க உண்மை சொல்லுங்க ,என்னமோ நடந்திருக்கு எல்லாரும் பொய் சொல்லுறீங்க ,உண்மையை சொல்லுங்க ,என்ன நடந்தது? வாசுவும் அனன்யாவும் ஏன் இப்படி இருக்காங்க? சீதாவும் கோகிலாவும் எங்கே? என்ன ஆச்சு? தயவு செய்து உண்மையை சொல்லுங்க ??

ESTÁS LEYENDO
மனம் ஏங்குதே
Romanceவாசு :அது ...அன்னயா ஏன்' வெளிய வந்த? அனன்யா :ஏன் உங்களுக்கு தெரியாதா?உங்க அம்மாக்கு என்ன தான் பிரச்சன்னை?ஏன் எப்போ பார் அடுத்தவங்க விஷயத்துல வராங்க?எல்லா இடத்துலயும் நாட்டாமை பண்ணியே ஆகணுமா?எல்லார் வாழ்க்கையும் அவங்க ஆட்டிவைக்கணுமா?எல்லா விஷயத்துலயு...