CHAPTER 26

376 9 4
                                    


பூங்காவில் அமர்ந்து இருந்த அனன்யா வாசு அருகில் வந்தான் அனன்யாவின் தம்பி அபிஷேக் .தயங்கி தயங்கி நின்ற தம்பியை பார்த்து" என்னடா ஏன் தயங்குகிற" என்று கேட்டால் அனன்யா "எனக்கு பசிக்குது" என்று தயங்கியவாறு கூறினால் அபிஷேக் .அப்போதுதான் காலையிலிருந்து யாருமே உணவு அருந்தவில்லை என்பதை உணர்ந்த வாசு

வாசு :"அனன்யா நீ அபியை கூப்பிட்டு போய் சாப்பாடு வாங்கி கொடு, நான் அங்கு இருக்கவங்கள சாப்பிட அனுப்பி வைத்துவிட்டு தாத்தா பக்கத்தில் இருக்கிறேன்"

அனன்யா: "என்ன மாமா நீங்கள் இன்னும் சாப்பிடல"

வாசு: அனன்யா ,நான் தாத்தா பக்கத்தில் இருக்கேன் ,நீங்க வந்தபிறகு வேணா போய் சாப்பிடுறேன், எனக்கு பசியும் இல்லை, சாப்பிடுற மூடும் இல்லை"என்றாIன்.

அவனை அதற்குமேல் வற்புறுத்த விரும்பாத அனன்யா அபிஷேக்குடன் அங்கிருந்து உணவகம் நோக்கி சென்றாள் .மருத்துவமனை உள்ளே சென்ற வாசு மகேஷ் வந்திருப்பதைப் பார்த்தான் .மகேஷை பார்த்த வாசுவுக்கு மீண்டும் குற்ற உணர்வு தலை தூக்கியது .வாசுவின் நிலை புரிந்துகொண்ட மகேஷ் "வாசு உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்லை ஆனால் அதை உன் அம்மா விஷயத்தில் எதிர்பார்க்காதே அவங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு தான் வந்து இருக்கேன்"என்றார்."மாமா எனக்கு எந்த வருத்தமும் இல்ல, நான் அம்மா விஷயமா உன்கிட்ட எந்த உதவியும் கேட்க மாட்டேன், அவங்க செஞ்சது ரொம்ப பெரிய தப்பு அதுக்கான தண்டனையை கிடைத்தே ஆகணும், அப்புறம் ,அனன்யா அபிஷேக் கூட உணவகத்தில் இருக்கா, நீங்களும் அங்க போய் சாப்பிடுங்க யாருமே இன்னும் சாப்பிடவில்லை நீங்க சாப்பிட்டு வர வரைக்கும் நான் இங்க இருக்கேன்"என்றான். இந்த கஷ்டமான சூழ்நிலையிலும் மற்றவர்களின் பசியாற வேண்டும் என்று என்னும் வாசுவை பெருமையுடன் பார்த்த மகேஷ் "நீ அப்படியே உன் தாத்தாவின் வளர்ப்புப்பா "என்று கூறிவிட்டு உணவகம் சென்றார் .

மனம் ஏங்குதேWhere stories live. Discover now