மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய வாசுவிற்கு எதுவும் புரியவில்லை."என்னாச்சு?எல்லாரும் ஏன் டென்ஷனா இருக்கீங்க?"என்று கேட்டான்.வாசு குரல் கேட்டு திரும்பிய கோகிலா அவனை பார்த்ததும் மீண்டும் அழ துவங்கினால்.தாயின் அழுகை கண்டு பதறிய வாசு "அம்மா என்னாச்சு ?ஏன் அழுறீங்க "என்று கேட்டான் .
பெண் பார்க்க சென்ற இடத்தில் நடந்ததை கூறினார் ரமணன்.அதை கேட்ட வாசுவிற்கு என்ன சொலவ்து என்று தெரியவில்லை,அவன் மனதில் தாத்தா சீக்கிரம் குணமாக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இப்போது அவன் மனதில் இருந்தது ,இப்போது திருமண பேச்சு எடுத்து அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை .
வாசு :வீட்டுல இந்த நிலைமை இருக்கப்போ கல்யாண வேலை பார்த்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க தான் ,அதுனால தான் சொல்லுறேன் இப்போ இந்த கல்யாண பேச்சு எடுக்காதீங்க ,தாத்தா குணமாகி வீடு வரட்டும் ,பிறகு பார்த்துக்கலாம்.
கண்ணன் :வாசு ,அப்பா நிலை மோசமா இருக்குனு doctor சொல்லுறாங்க ,உங்க அம்மா உனக்கு கல்யாணம் பண்ணனும் சொன்னதும் அப்பா ரொம்ப சந்தோசமா இருந்தாரு ,அது உனக்கும் தெரியும் ,இப்போ அப்பாக்கு இப்படி ஆகிருச்சு ,அவர் இருக்கும் போதே உனக்கு கல்யாணம் பண்ணனும் நெனைக்குறதுல என்ன தப்பு இருக்கு?
வாசு :தப்பு இல்லை மாமா ,ஆனா எனக்கு இப்போ விருப்பம் இல்லை. தாத்தா குணமாகட்டும் ,பிறகு பார்த்துக்கலாம்
கண்ணன்:புரியாம பேசாத வாசு ,அவர் ஆசை உன் கல்யாணம் தான் .அவர் மனசு நிச்சியமா சந்தோச படும் வாசு
வாசு :சரி மாமா எனக்கு சம்மதம் தான் ,ஆனா அதுக்காக பொண்ணு கேட்டு போய் நீங்கல்லாம் அவமான படணுமா??நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ண பார்க்கணுமே ,நடக்குமா?
கண்ணன் :அதுனால தான் உனக்கும் அனன்யாவிற்கும் அடுத்த முகுர்த்தத்துல கல்யாணம் நிச்சியம் பன்னிருக்கோம்.
அனன்யாவிற்கும் தனக்கும் திருமணம் என்றதும் வாசு அதிர்ந்து விட்டான் .
YOU ARE READING
மனம் ஏங்குதே
Romanceவாசு :அது ...அன்னயா ஏன்' வெளிய வந்த? அனன்யா :ஏன் உங்களுக்கு தெரியாதா?உங்க அம்மாக்கு என்ன தான் பிரச்சன்னை?ஏன் எப்போ பார் அடுத்தவங்க விஷயத்துல வராங்க?எல்லா இடத்துலயும் நாட்டாமை பண்ணியே ஆகணுமா?எல்லார் வாழ்க்கையும் அவங்க ஆட்டிவைக்கணுமா?எல்லா விஷயத்துலயு...