CHAPTER 24

316 12 4
                                    


சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்கள் முறைக்காக காத்துஇருந்த வாசு தாத்தாவை எண்ணினான்.அனன்யா நன்றக இருக்கவேண்டும் என்று விரும்பியவரின் உடல்நிலை வைத்தே அனன்யாவை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்த தன் தாயை நினைத்து மனம் கசந்தது .கோபி தாத்தாவை பார்த்துக்கொள்ள மருத்துவமனையிலேயே தங்கியதால் திருமணத்திற்கு வரவில்லை .அவனிடம் பேச மொபைலை எடுத்தான் ,கீதா ஏதோ வீடியோ அனுப்பி இருந்தால்,ஏதாவது போர்வேர்ட் மெசேஜ் என்று எண்ணிக்கொண்டு அதை பார்க்காமல் கோபிக்கு அழைத்தான் .

கோபி :ஏன்டா கல்யாணம் முடிஞ்சுருச்சா ??

வாசு :ஏண்டா நீ வேற கடுப்பேத்துற?நானே மனசு சரி இல்லாம இருக்கேன்

கோபி :விடுடா .எல்லாம் நன்மைக்கென்னு நினைப்போம் .

வாசு :தாத்தா எப்புடிடா இருக்காரு?

கோபி :அப்படியே தான் இருக்காருடா .எனக்கும் ஒன்னும் புரியல

வாசு :தாத்தாவை பத்தி கவலை படமா அவர் பேரவச்சே அவருக்கு விருப்பம் இல்லாத விஷயத்தை செய்யுராங்கடா .அவரை ரொம்ப மிஸ் பண்ணுறேன்

கோபி :டேய் கலங்காத்தாடா ,நடக்கும்னு இருக்குறது நடந்தே தீரும் . என்று கோபி பேசிக்கொண்டு இருக்கையிலேயே மருத்துவரும் ஒரு காவல்துறை அதிகாரியும் உள்ள வந்தார்கள்.

கோப்பியிடம் வந்த மருத்துவர் "இவர் தான் ராமன் ஐய்யா "என்றார் .கோப்பியை பார்த்த கான்ஸ்டபிள் "தம்பி நீங்க யாரு,இந்த பெரியவருக்கு நீங்க என்ன வேணும்?"

கோபி : "சார் ,என் பேர் கோப்பி ,தாத்தாவோட பேரனும் நானும் நண்பர்கள் ,இவர் எனக்கும் தாத்தாதான் ,என்ன விஷயமா கேக்குறீங்க தெரிஞ்சுக்கலாமா?"

இந்த சம்பாஷணை போனில் கேட்ட வாசு "டேய் கோப்பி என்னாச்சு?யாரு வந்துருக்காங்க"

கான்ஸ்டபிள்:தம்பி,போன்ல யாரு?

கோபி :இவரோட பேரன் வாசு லைன்ல இருக்கான் சார் ,திடீர்னு போலீஸ் வந்தாளா பதறுறான் சார் .என்ன விசயமா வந்து இருக்கீங்க சார்? என்று சொல்லி போனை ஸ்பீக்கர் போட்டான்

மனம் ஏங்குதேWhere stories live. Discover now