CHAPTER 9

468 15 7
                                    


அடுத்தநாள் பேர பிள்ளைகள் அனைவரும் மட்டும் எங்காவது ஒன்றாக சென்று நேரம் செலவிடுமாறு தாத்தா உத்தரவுயிட்டார் .அதன் படி அனன்யா கீதா அபினவ் அபிஷேக் வாசு ஒன்றாக அவர்கள் தோப்புக்கு சென்றார்கள் .உடன் வசுவின் நண்பன் கோபியும் சேர்ந்துகொண்டான்.தோப்பின் நடுவே அழகான குட்டை உண்டு ,அதை ஒட்டினாற்போல் ஒரு சிறு வீடு கட்டிவிட்டார் தாத்தா .அங்கே வேலை இருக்கும் சமயம் தாங்கிக்கொள்ள கட்டினார்கள் .இப்போது நம் இளவட்டம் அங்கே தான் செல்கிறார்கள்.அவர்கள் அங்க சென்றதுமே வேலையாட்கள் இளநீர் வெட்டிக்குடுக்க ருசியான இளநீரை ஒருகை பார்த்தார்கள் .பின்பு அப்படியே தொப்பை சுத்தி வந்தார்கள்.

வேலையாட்களிடம் கணக்கு வழக்கு பேசிவிட்டு திரும்பிய வாசு அனன்யா மீது மோதி நின்றான்.

வாசு : (MINDVOCIE ஐயோ கோவப்படுவாளோ )சாரி அனன்யா நான் கவனிக்கல.

அனன்யா :பரவாயில்லை .உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அதான் உங்கள தேடி வந்தேன் .

வாசு :சொல்லு அனன்யா என்னாச்சு ?

அனன்யா :அது ..அது ..அன்னிக்கு உங்க அம்மா மேல இருக்க கோவத்தை உன்மேல கட்டிட்டேன்.சாரி.

வாசு:பரவாயில்ல அனன்யா ஒன்னும் பிரச்னை இல்ல.எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

அனன்யாவிற்கு தான் இன்னும் குற்றவுணர்வு கூடிவிட்டது . மகேஷ் மாமா பேசியது மனதில் வந்து போனது ." வாசு நல்ல பையன் அனன்யா "இவள் தாய் தந்தை இவளை கவனிக்காது விட்டது எப்படி இவன் கரணம் ஆவான் ?இவன் தாய் பேச்சுகளுக்கு இவனிடம் சத்தம் போட்டது எவ்வளவு முட்டாள் தனம் .

குற்றஉணர்வில் மீண்டும் மன்னிப்பு கேட்டால் அனன்யா

அனன்யா :சாரி வாசு.

வாசு :அதை விடு அனன்யா வருத்தப்படாத.இங்க வா இப்படி உட்கரு ,வெயில்ல நிக்காத .

ஏதும் சொல்லாமல் அவன் சொன்ன இடத்தில் உட்கார்ந்து அவனை பார்த்து சிறு புன்னகை பூத்தாள் அனன்யா.வாசுவிற்கு அவன் சிறுவயதில் விளையாடிய குழந்தை அனன்யா கண்முன் வந்து மறைந்தாள்.

மனம் ஏங்குதேWhere stories live. Discover now