CHAPTER 21

430 14 2
                                    


யாருக்கும் காத்துஇருக்காமல் மறுநாள் அழகாக விடிந்தது .ஜன்னல் வழியே சூரியோதயத்தின் அழகை ரசித்து கொண்டு இருந்த வாசு "எல்லார் வாழ்க்கையிலும் இது போல் அழகிய விடியல் வரணும்"என்று நினைத்தான்.விடியலின் அமைதியை சிறிது நேரம் ரசித்து விட்டு ,அன்றைய தினத்தை எதிர்கொள்ள கிளம்பினான்.அன்று காலை உணவைக்கூட அவன் அறையிலேயே முடித்து கொண்டான் வாசு .வக்கீல் வந்து இருக்கார் என்று அனன்யா சொன்ன பின்பு இருவருமாக கிழே வந்தார்கள்.

ஹாலில் அனைவரும் இருந்தார்கள் .வேலை விஷயமாக வெளிய சென்று இருந்த மகேஷ் விஷயம் கேள்வி பட்டு அனன்யாவிற்கு துணை நிற்க இரவோடு இரவாக வந்து விட்டார்.அனன்யா வந்ததும் அவளை அணைத்து "எப்போமே உனக்கு நாங்க இருக்கோம்டா ,நீ என்ன முடிவு பண்ணாலும் கூட இருப்போம் "என்று சொன்னார் .அனன்யா இருந்த மனநிலையில் அவளுக்கு இந்த அரவணைப்பும் ,ஆறுதலும் நம்பிக்கை குடுத்தது.

அதே தைரியத்துடன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு வாசுவை பார்த்தால் .அவள் பார்வை புரிந்து கொண்ட வாசு "பாட்டி நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்குறேன் ,அனன்யாவிற்காக மட்டும் தான் சம்மதிக்குறேன் ,அவ கேட்கும் கோரிக்கைக்கு நீங்க சம்மதிக்கணும் ,இல்லைனா  இந்த கல்யாணம் நடக்காது "என்று தெளிவாக சொன்னான் .

இப்பொழுதே அனன்யாவிற்கு துணைக்கு வரும் பேரனை பார்த்து பெருமை பட்ட பாட்டி "அனன்யா என்ன கேட்டாலும் சம்மதிக்குறோம்னு நேத்தே சொல்லிட்டோம் .அவ என்ன கேட்டாலும் செய்யுறோம்.நீங்க இரண்டு பேரும் ஒத்துக்கிட்டதே போதும் எங்களுக்கு ."என்றார்.

அனன்யா :சரி அப்போ மீதியை என் ரூமில் பேசிக்கலாம் ,வக்கீல் சார் ,Mr அண்ட் Mrs கண்ணன் என் ரூம்க்கு வாங்க ,என்று சொல்லிவிட்டு வாசுவுடன் அவள் ரூமிற்கு சென்று விட்டால்.

அவள் அழைத்த விதம் கேட்டு கண்ணனுக்கு கோவம் வந்தது .கல்யாணம் முடியட்டும் என்று பொருமி விட்டு சென்றார்.

மனம் ஏங்குதேHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin