அத்தியாயம் 1

21K 237 32
                                    

சென்னையில் காலை நேர பரபரப்பு. பீக் ஹவர் என்று சொல்லும் காலை எட்டுமணி. மனிதர்கள் சிறகு இல்லாத பறவையாக பறந்துக்கொண்டிருந்தார்கள். ஆபிஸ் கிளம்பும் ஆண்களும், பெண்களும் ஓட்டமும், நடையுமாக நெருக்கடியான ரோட்டை கடந்து பஸ்டாண்ட் பக்கம் போய் கொண்டிருந்தார்கள். பள்ளி குழந்தைகளை ஆட்டோ, வேன், சைக்கிள் ரிக்ஷயாவில் ஏறி சென்றுகொண்டிருக்க, அதுவரை பம்பரமாக சுழன்ற இல்லத்தரசிகள் 'ஹப்பா' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு அண்டை வீட்டாரிடம் சினேக புன்னகை சிந்தி கதை பேச தொடங்கியிருந்தார்கள்.

நெருக்கடியான மக்கள் தொகையை கொண்ட பகுதி அது. பெட்டி பெட்டியாக நெருங்கி இருந்த வீடுகள். அனல் காற்று வீசும் போது தந்தூரி சிக்கன் போல வெந்து போவது உறுதி, அந்த அளவு நெருக்கடியான பகுதி. அதில் ஒரு அப்பார்ட்மென்டில் கீழே மூன்று வீடும், மேலே மூன்று வீடுமாக ஆறு குடும்பம் இருந்தது.

அதில் மேல் போஷனில் நடுவீட்டில் இருந்து 'வீல் வீல் ' என்று குழந்தை அழும் சத்தம் அந்த அப்பார்ட்மென்டில் இருக்கும் அத்தனை குடும்பத்தாரின் காது சவ்வை கிழித்தது. சிலருக்கு எரிச்சல் வர, சிலருக்கு அந்த குழந்தையின் தாயின் மீது பரிதாபம் வந்தது.

என்னதான் அரசாங்கம் ஆயிரம் சட்டம் திட்டம் வகுத்தாலும் அது சிலருக்கு வெறும் ஏட்டு சுரைக்காய்தான். பதினெட்டு வயதுக்கு மேல்தான் வாகனம் ஓட்ட வேண்டும் என்று சொன்னால் அதில் இருக்கும் நன்மையை உணராமல் பொடி பொட்டு எல்லாம் கால் எட்டாவிட்டாலும் நின்றுக்கொண்டே பைக்கை ஓட்டிக்கொண்டு ஊரை சுற்றும்.

பெண்களின் திருமண வயது இருபத்தி ஒன்று என்று கூறினால் ஏதோ வேலையத்தவன் எழுதிவைத்துவிட்டு போயிருக்கான் என்று அதையும் மீறுவது. போஸ்டர் அடித்தா ஒட்ட முடியும் எதற்காக இருபத்தொரு வயது என்று வைத்திருக்கிறார்கள் என்று.
இருபதை தாண்டும் வரை எல்லோரும் குழந்தைகள்தான் மனதாலும், உடலாலும்.

சில குரூப் இருக்கிறது பதினாறில் திருமணத்தை முடித்துக்கொண்டு அடுத்த வருடமே குழந்தைகளையும் பெற்றுக்கொண்டு தாயும், பிள்ளையும் ஒரே மாதிரி வளர்வதுண்டு.

கடிவாளம் அணியாத மேகம் Where stories live. Discover now