அத்தியாயம் 18

3.9K 210 29
                                    

பணமும், வசதி வாய்ப்பும் இருந்துவிட்டால் தவறான பழக்கத்தை பழக வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆனால் அநேகர் அப்படி இருப்பதில்லை. இப்போதேல்லாம் பணம் மட்டுமே ஒவ்வொருவரின் பாவ கணக்கை தீர்மானிக்கிறது. ஆனால் அந்த பாவம் அவர்களை அப்படியே விட்டுவிடுவதில்லை. எல்லா வினைக்கு ஒரு எதிர்வினை இருக்கும் என்பதுதான் நிதர்சனம்.

சாய்வேதனின் குடிபழக்கமும், பெண்கள் சகவாசமும் அவனை நீங்கா துயரத்தில் நிறுத்தியிருந்தது. அதை யாரிடமும் சொல்லும் நிலையில் அவன் இல்லை. அது அவனுக்கே அவனுக்கான ரகசியம். அதை நினைத்து இன்று அவன் வருந்தும்படி இருந்தது அனுமித்ராவின் செய்கை. 'ஏதோ கோபத்தில் நேற்று இரவு என்னை கவனிக்காமல் இருந்துவிட்டாள். ஈரத்தோடு படுத்ததால் லேசாக காச்சல் போல உடல் சூடு ஏற்பட்டுவிட்டது. அதுக்கு போய் காலையிலேயே இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருக்கிறாளே! சில நேரம் வயதுக்கு மீறிய முதிர்ச்சி அவளிடம் தெரிந்தாலும் பல நேரம் சிறுபிள்ளையாகவே இருக்கிறாள். இவள் கையில் இந்த வயதில் ஒரு குழந்தையை கடவுள் கொடுத்திருக்க வேண்டாம்.' என்று நினைத்தவன் அவள் முதுகை தடவிவிட்டுக்கொண்டே இருந்தான். மெது மெதுவாக அவள் அழுகை குறைந்தது.

"ஆதிக் அம்மா" என்று அழைத்தான் அவன்.

அவன் வித்தியாசமான அழைப்பில் அவளை அவளுக்கு உணர்த்தினான் அவன். உணர்ந்தாலும் விலகாமல் "ம்" என்றாள் அவள்.

"ஆதிக் உன்னை தேடுவான்." என்றான்.

"அவன் இன்னும் முழிச்சிருக்கவே மாட்டான்." என்றாள் இவள்.

"அப்போ நீ என்னை விடமாட்ட." என்று கேட்டு லேசாக சிரித்தான் இவன்.

"மாட்டேன்." என்று கூறிவிட்டு மறுபடியும் அவன் நெற்றியில் கை வைத்து பார்த்தாள். சுடவில்லை. ஆனால் அவள் முகம் தெளியவில்லை. ஜீவன்த்க்கு இவளை ஒருவருடம் கவனித்து கொண்டதில் எந்த சிரமும் இருந்தது இல்லை. எல்லாவற்றையும் புரிந்து அதற்கேற்றார் போல நடந்துக்கொள்பவள். ஆனால் அவனுக்கோ, ஆதிக்கோ சற்று உடல்நலம் சரியில்லை என்றால் அவளை அவனால் சமாளிக்கவே முடியாது. பயம், கலக்கம், அழுகையுடனே அந்த நாளை போக்குவாள். அதை சொல்வதற்குள் இவன் போனை வைத்துவிட்டான். ஆனாலும் இவன் அவன் வழியில் அவளை சமாளித்தான்.

கடிவாளம் அணியாத மேகம் Tahanan ng mga kuwento. Tumuklas ngayon