அத்தியாயம் 8

3.9K 196 19
                                    

தன்னுடைய போனை எடுத்து பேசும்படியாக சாய்வேதன் போய் சொல்லிட்டு வந்த பிறகும் அவள் போனை எடுக்கவில்லை. இவன் கோபத்துடன் இருக்க அவளாகவே அழைத்தாள்.  நேற்று முதல் அவளுக்கு போன் அடித்து இவனுக்கு அவளின் நம்பர் மனதில் பதிவாகிவிட்டது.  அதனால் அதை பார்த்த மாத்திரத்தில் எடுத்தான். 

"ஹலோ ஒரு போன் அடித்தால் எடுத்து பேச தெரியாதா? நீ அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?" என்று இவன் ஆரம்பத்திலேயே மேலே எழும்ப 

"ஒழுங்கா பேசாட்டி போனை வச்சிருவேன் பாரு.  உன்னை போல என்னை வெட்டின்னு நினைச்சியா? சமைக்கணும், வீட்டை கிளின் பண்ணனும், துணி துவைக்கணும், வீட்டை பெருக்கணும், துணி மடிக்கணும் இதெல்லாம் பட்டுகுட்டியை பார்த்துட்டே செய்யணும்.  அவன் வேற இப்போ மதியம் தூக்கவே மாட்டேங்குறான். இப்போதான் அவனை குளிப்பாட்டி, மருந்து கொடுத்து தூங்கவச்சுட்டு வரேன். மருந்தை வேற தூர துப்பிட்டான் அவன். அது வேற ஒரு கவலை.  இனி போய்தான் நான் குளிக்கணும், சாப்பிடனும். இதுக்கு இடையில நீ வேற நொய்யு நொய்யுன்னு போனை போட்டுட்டு இருக்க.  என மாமா வேற உன் போனை எடுத்து பேசாம இருந்திருக்காரு." என்றாள் அவள் படபடவென்று. 

'ஓ காட் கால் பார்வர்ட்ன்னு சொல்லும் போது   நான் ஏதோ செட்டிங் மிஸ்டேக்ன்னு நினைச்சிட்டேன்.  அவன் இன்னும் என்னல்லாம் செய்வான்.' என்று மனதிற்குள் அவனை திட்டியவன் 

"இப்போ நீ பேசுவது உன் மாமாவுக்கு தெரியுமா?" என்று கேட்டான். 

"ம் தெரியும், கேட்டுட்டுத்தான் பேசுறேன்.  உன் இஷ்டமுன்னு சொன்னார்." என்றாள் அவள்.

"உங்கிட்ட பேச நினைச்ச என்னை பிஞ்ச நெருப்பால அடிக்கணும். நான் யாருக்கும் தெரியாம உங்கிட்ட பேசனுமுன்னு நினைச்சா நீ ஊருக்கே சொல்லிட்டு பேசுற." என்றான் அவன். 

"சரி அடிச்சிட்டு மெதுவா வந்து பேசு." என்றாள் அவள்.

"வாட்?" என்று அதிர்ந்தவன் "நீ பஸ்ட்  கொட்டிட்டு வந்து தெம்பா பேசு.  அப்புறம் உன்னைவிட நான் ஏழு வயசு மூத்தவன்.  கொஞ்சம் மரியாதையாக பேசு.  எல்லாத்தையும் சொல்லி தந்த உன் மாமா இதை சொல்லி தரலையா. போ போய் சாப்டுட்டு போன் போடு." என்றான் இவன் பல்லை கடித்துக்கொண்டு. 

கடிவாளம் அணியாத மேகம் Où les histoires vivent. Découvrez maintenant