அத்தியாயம் 21

4K 206 25
                                    

இந்த திருமணத்தைப்பற்றி யோசிக்கணும் என்று ஜீவன்த்தின் தகப்பனார் சொல்லவும் அங்கே சிறிது நேரம் அமைதி நிலவியது.  இந்த பிரச்சனைக்கு காரணமானவளோ இப்போதே அந்த பந்தத்தை அறுக்க கூட தயாராகிவிட்டாள் ஜீவன்த்காக.  யார் செய்வார்கள் இந்த காலத்தில் இப்படி ஒரு உதவியை?  வயிற்றில் குழந்தையுடன் நின்ற பெண்ணிற்காக தன் குடும்பத்தையே உதறிவிட்டு தன் வாழ்க்கையை பற்றி கவலைப்படாமல் தாய் சேய்  இருவரையும் கண்ணுக்குள் வைத்து பாதுகாத்து அவர்களுக்காக எல்லாவற்றையும் துறக்க தயாராக? அப்படி இருந்த ஒருத்தனுக்காகத்தான் கல்யாணம், உறவு என்று எல்லாவற்றையும் வெறுத்த போதும் அதை ஏற்றுக்கொண்டாள் அனுமித்ரா.  இப்போது அதுவே அவனின் வாழ்க்கையை அழிக்க நினைக்கும் போது தேவையில்லை இந்த உறவு என்றே அவள் எண்ணினாள் இடையில் இருக்கும் கணவனை மறந்தவளாக.  

இவள் மறக்கலாம் ஆனால் சின்ன பெண்ணான இவள் வாயிலாக தாயின் அன்பை உணருபவன் அவ்வளவு சீக்கிரத்தில் அவளை விட்டுகொடுத்து விடுவானா? 

"என்ன யோசிக்கணும்? இங்கே திருமணம் நடக்க போவது என் தங்கைக்கும், உங்கள் மகனுக்கும். இதற்கு இடையே என் மனைவி எங்கே வருகிறாள்?" என்றான் சாய்வேதன்.  

"பிஞ்சிலே பழுத்த இவளும், அதற்கு காரணமான நீங்களும் இருக்கும் குடும்பத்தில் பெண் எடுக்க யாரும் யோசிக்கத்தான் செய்வாங்க." என்றார் ஜீவன்த்தின் தகப்பன். 

"அதிகமா யோசிப்பவங்க பைத்தியக்கார ஹாஸ்பிடலுக்குதான் போகணும்.  இது எங்க வாழ்க்கை, அதை எங்க இஷ்டபடிதான் வாழ முடியும்.  நீங்க யோசிக்கிறிங்க என்பதற்காக என்னால் எதுவும் செய்ய முடியாது. என் தங்கைக்கு திருமணம் செய்து வைக்கும் கடமையும், பொறுப்பும் எனக்கு இருக்கிறது. ஆனால் அவளின் காதலை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இல்லை, அது காதலித்த இருவருக்கும்தான் இருக்கிறது. இதில் அனாவசியமாக என் மனைவியைப்பற்றிய விவாதம் தேவையில்லாதது." என்று காட்டமாகவே முடித்தான் சாய்வேதன். 

கடிவாளம் அணியாத மேகம் Where stories live. Discover now