அத்தியாயம் 4

4K 196 29
                                    

'பாரதி கண்ட புதுமை பெண்ணாக நடைபோடும் பெண் ஒருத்தி தன்னால் துன்பபட்டுவிட்டாளே!' என்ற கழிவிரக்கத்தில் இருந்தான் ஜீவன்த். ஆயிரம் நன்மைகள் இந்த வேலையால்  விழைந்தாலும் அந்த வேலை இனி அவனுக்கு தேவையில்லை என்ற எண்ணம் அவனுக்குள் வலுப்பெற்றது.

சயூரியை பற்றி அவன் பல நேரம் தன் மனதிற்குள் பெருமையாக நினைத்திருக்கிறான். 'பெண்கள் என்றாலே பலவீனமானவர்கள் என்ற எண்ணத்தை  தகர்த்தெரிந்தவள். ஒரு ஆணுக்கு நிகராக என்று கூட சொல்லமுடியாத அளவுக்கு அதற்கு மேலாகவும் ஒரு நிறுவனத்தை திறன்பட நடத்திவருபவள். வெளிநாட்டில் வளர்ந்தாலும் ஒரு பார்வையாலேயே தன்னை தவறாக பார்ப்பவர்களை பத்தடி தூரத்தில் நிறுத்தும் தைரியமான பெண். ஆனால் அந்த தைரியத்தை எல்லாம் தகுதியே இல்லாத தனக்காக காற்றில் பறக்கவிட்டுவிட்டாள்.' என்று நினைத்தவன் தன் வேலையை ரிசைன் செய்தான்.

சயூரி தன் அண்ணன் சொன்னதை எப்படி செய்வது என்று குழப்பத்தில் இருக்க இவனே வேலையை விட்டுவிட அவளுக்கு இருந்த கொஞ்ச நிம்மதியும் பறிபோனது. அவன் தனக்கு கிடைக்கவில்லை என்றாலும் எட்ட நின்று அவனை பார்த்து நிம்மதி அடைந்த அவள் மனது காதல் பிரிவால் வாடியது. கூடவே அவனுக்கு வேறு வேலை கிடைக்கவில்லை என்பதும்  துன்பத்தை கொடுத்தது அவளுக்கு.

யோசித்தவள் அவனுக்காக ஒரு வேலையை ஏற்பாடு செய்தாள் வேறு நிறுவனத்தில். அதை தெரிந்துக்கொண்டு அதையும் நிறுத்தினான் அவளின் பொல்லாத அண்ணன். ஒரு மாதத்தை நெருங்க தொடங்கியது ஜீவன்த்  வேலையை விட்டு. ஒரு மாதமும் அவன் சமாளித்திருப்பான் போன மாதம் வாங்கிய சம்பளத்தை வைத்து. இனி என்ன செய்வான்? என்று நினைத்தவள் அவனை காண நேரடியாக அவன் வீட்டுக்குக்கே சென்றாள். இந்த ஒருமாத காலத்தில் சாய்வேதன் அடிக்கடி தாயகம் வந்து போனான். அவன் இல்லையென்றால் அவன் வைத்த ஆள் என்று இவளை கண்காணிப்பில் வைத்தப்படிதான் இருந்தான் அவன்.

தங்கையை இந்த காதலின் துயரத்தில் இருந்து பத்திரமாக மீட்க வேண்டும் என்ற துடிப்பு அவனுக்கு. திருமணம் ஆனவன் என்று தெரிந்தும் அவனைத்தான் நினைத்துக்கொண்டிருப்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் தங்கையின் கண்ணில் ஜீவன்த் மீண்டும் படகூடாது என்ற முடிவில் அவன் உறுதியாக இருந்தான்.

கடிவாளம் அணியாத மேகம் Où les histoires vivent. Découvrez maintenant