அத்தியாயம் 39

5.1K 227 31
                                    

அனுமித்ரா ஆத்திரத்தில் தன் மனதில் இருந்த பாரத்தை எல்லாம் வெளியே கொட்டிவிட்டு மயங்கி சரிய சயூரியும், ஜீவன்த்தும் பதறிப்படி அவளை மயக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வர முயன்றுக்கொண்டிருந்தார்கள்.  ஆனால் உடையவனோ அவள் பக்கத்தில் கூட போகாமல் அப்படியே சிலையாக நின்றிருந்தான். 

"அனு, அனு" என்று அவளை உலுக்கிக்கொண்டிருந்த சயூரிக்கு ஏதோ உருத்த அவள் நிமிர்ந்து தன் அண்ணனை பார்த்தாள்.  அவன் நின்றிருந்த நிலை அவளுக்கு கலக்கத்தை கொடுக்க கணவனின் தோளை தொட்டு அவனை அழைத்தாள்.  மனைவி எதையோ கூற வருகிறாள் என்பதை உணர்ந்து அவள் முகத்தை பார்த்த ஜீவன்த் பார்வை சயூரியை தொடர்ந்தது.  

"இவன் ஏன் இப்படி இருக்கிறான்.  இருந்து பேசி தீர்க்க வேண்டிய ஒரு விசயத்தை ஏன் இரண்டு பேரும் இப்படி பேசாமலேயே பெருசாக்கி ஒருத்தரை ஒருத்தர் துன்புறுத்திக்கிறாங்க.  அடே டேய்யப்பா சாய் சுயநினைவுக்கு வாடா! சத்தியமா என்னால முடியல.  என்னை நம்பி என்னுடன் வந்த பொண்ண என் சுயநலத்திற்காக உன்னை நம்பி நட்ராற்றில் விட்டது போல இருக்குடா.  பாவண்டா இவ.  பெண் பாவம் பொல்லாதது.  நம்மை நம்பி வந்த ஒரு பெண் மனசு கொஞ்சம் வேதனைப்பட்டாலும்  நாம நல்லாவே இருக்க முடியாதுடா.  டேய் மாப்பிள" என்று சாய்வேதன் கையை பிடித்து இழுத்தான் ஜீவன்த். 

"ஆங்.." என்று தூக்கத்தில் இருந்து விழித்தவன் போல விழித்த சாய்வேதன் மயங்கி கிடந்த மனைவியை இரு கைகளிலும் அள்ளினான்.  

"என்னடா பண்ணுற? அவளை தூக்கிட்டு எங்கே போற?" என்றான் ஜீவன்த் குழப்பத்துடன்.

"நான் உயிரோட இருக்கும் வரை இனி இவ என்னுடன்தான் இருப்பா.  நான் செய்த தப்புக்கு எனக்கு இவ தண்டனை தரதா இருந்தா என் உயிரை எடுத்துக்கட்டும், ஆனால் இனி இவளை நான் எங்கேயும் விடுவதாக இல்லை. வளந்துட்டான்னு நினைச்சேன்.  இல்ல... இப்போ இல்ல எப்போதுமே என் விசயத்தில் இவ வளர போவதே இல்லை.  இனி நான் பார்த்துக்குறேன்.  பேபி ஆதிக்கை கூட்டிட்டு வா." என்று கூறிவிட்டு நடந்தான் சாய்வேதன்.  

கடிவாளம் அணியாத மேகம் Wo Geschichten leben. Entdecke jetzt