அத்தியாயம் 14

4K 211 30
                                    

அசந்து தூங்கும் மனைவியை பார்த்தப்படி அமர்ந்திருந்தான் சாய்வேதன்.  குடிக்க பழகிய காலம் தொட்டு அவனால் இதுவரை இரவு குடிக்காமல் தூங்க முடிந்ததில்லை.  உலக வரலாற்றில் முதல் முறையாக மூன்று தினங்களை கடந்திருந்தான் குடிக்காமல். அது ஒன்றும் கடினமாக இருக்கவில்லை இவனுக்கு.  குடிபோதையை விட இவன் மனைவியின் அருகாமை இவனுக்கு ஆழ்ந்த தூக்கத்தையே கொடுத்தது.  அது பெண்ணின் மீது ஏற்பட்ட மயக்கத்தில் இல்லை.  இதுவரை அவன் அறிந்திராத ஸ்பரிசத்தில்.

கைக்குழந்தையாக இருக்கும் போதே இன்னொருவரின் கவனிப்பில் கொடுத்துவிடும் ராயல் குடும்பம்! தாயின் ஸ்பரிசத்தை  அந்த அளவுக்கு இவன் உணர்ந்ததே இல்லை.  வேலையாக செய்யும் ஒரு பெண்மணிக்கு இவன் முதலாளியின் குழந்தை. அதனால் இவனை தேவைக்கு மட்டுமே தொட்டிருப்பார் இவனை வளர்ந்த பெண்மணி.  அப்படிப்பட்டவனுக்கு இப்படி ஒரு மனைவி புதையல் போல் அல்லவா!

தூங்க ஆரம்பிக்கும் போது அவன் கையை பிடித்துக்கொண்டு அதில் லேசாக முகம் உரசும் படி தூங்குபவள், சற்று நேரத்தில் இவன் மார்பில் மையம் கொண்டிருப்பாள்.  அது அவள் வேலையா ? இல்லை இவன்  வேலையா என்று தெரியாது. தூக்கத்தில் அவன் லேசாக அசைந்தாலும் இவளின் பூக்கரம் மென்மையாக அவன் மார்பில் தட்டிகொடுக்கும், தன்னை பிடித்திருக்கும் அவன் கையை தடவிவிடும், தலையை கோதிவிடும் மிக அன்பாக. தூக்கத்தில் கூட மாறாத தாய் அன்பு. 

இதை அவன் வயிற்றுக்குள் ஊற்றிக்கொண்டு வரும் எந்த போதை தந்துவிட போகிறது. ஆனாலும் அதை மனம் தேடியது , போதைக்காக இல்லை, அது இருந்தால்தான் இவன் மனம் தேடும் ஒன்றை அவன் கண்டடைய முடியும்.  அதற்காக அந்த போதையை நாடினான்.  நான்காவது நாளான்ன இன்று எப்படியும் குடித்தே ஆகவேண்டும் என்று தன் கையை பிடித்திருந்த  மனைவியின் கரத்தை மெதுவாக விலக்கினான். பிடி சற்று இறுக்கமாகவே இருந்தது.  இவன் அசைவை உணர்ந்தவள் எப்போதும் போல இவனை தூங்கவைக்க முயற்சி செய்ய அன்றுதான் அவனுக்கே தெரியும் கையை பிடித்த இவள் எப்படி இவன் மார்புக்கு இடம் பெயருகிறாள் என்று.  அது இவன் வேலையாகத்தான் இருந்திருக்கிறது.  

கடிவாளம் அணியாத மேகம் Donde viven las historias. Descúbrelo ahora