அத்தியாயம் 6

4K 201 28
                                    

ஜீவன்த் புது வேலையில் சேர்ந்து ஒருமாதம் ஆகும் வரை அவனை சயூரியோ, சாய்வேதனோ சந்திக்க முயற்சி செய்யவே இல்லை.  அதன் பிறகு ஒரு நாள் இவன் வேலை செய்யும் ஆபிஸ்க்கு அவனை தேடி வந்தாள் சயூரி.  நாகரிகம் கருதி மறுக்காமல் அவளுடன் அருகில் இருந்த காஃப்பி ஷாப்க்கு செல்ல அங்கே இவர்களுக்காக சாய்வேதன் காத்திருந்தான்.  

'ஆஹா ஒன்று தனியாக வந்தாலே வில்லங்கம்தான், இரண்டும் சேர்த்து அல்லவா வந்திருக்கு.  இன்னைக்கு என்னன்ன கலகம் பண்ண போகுதுங்களோ!' என்று நினைத்தான் ஜீவன்த்.  

முதல் நாளை போல இல்லாமல் ஜீவன்த்தை மரியாதையுடன் பார்த்தான் சாய்வேதன்.  பேச்செல்லாம் அமர்த்தலாக இருந்தது. 

'எலி சேம் சேம் பப்பி சேம்ல போகுதே!' என்று கேலியாக நினைத்த ஜீவன்த் அண்ணனும், தங்கையும் எப்போது விசயத்திற்கு வருவார்கள் என்று காத்திருந்தான்.  

"ஜீவன்த் பேபிக்கு ட்வென்டி தர்ட்  முடிய போகுது.  இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்று எங்களாக எங்கள் பெற்றோரிடம் தப்ப முடியாது.  அங்க தினம் ஒரு போட்டோவை காட்டி இவளை டார்ச்சர் பண்ண தொடங்கிடாங்க.  நெக்ஸ்ட் மன்த் இவ மேரேஜ் முடிஞ்சே ஆகனும் என்று டெட் லைன் வேற கொடுத்திட்டாங்க.  யூ நோ இது கூட ஒரு பிஸினெஸ் மாதிரிதான் என் பரென்ட்க்கு.  அவங்களே மாதிரி அவங்க சொஸேட்டில மாப்பிளையை தேடுறாங்க.  எனக்கு அதுல எந்த கருத்தும் கிடையாது.  எல்லோம் ஒரே ரகம் என்று நான் போயிட்டே இருப்பேன்.  ஆனா இவ புதுசு புதுசா என்னனவோ சொல்றா.  லவ், அபெக்சன்,கேர் அப்படி இப்படி சொல்லிட்டே போறா.  அதெல்லாம் ப்ராக்டிகலா வொர்கவுட் ஆகாதுன்னு நான் சொல்லிட்டேன்.  ஆனாலும் பிடிவாதம் குறையல.  அவ இதையெல்லாம் உங்களிடம் பார்த்தாளாம். அதனால் நீங்கதான் வேணுமுன்னு பிடிவாதமா நிக்கிறா.  இப்போ மட்டும் அல்ல நீங்க மேரேஜ் ஆனவருன்னு தெரிந்த போதும் அப்படிதான் நின்றாள். இனி நீங்கதான் பதில் சொல்லணும்." என்று நீளமாக பேசி முடித்தான்.

"இதுல நான் என்ன பதில் சொல்ல?  என்னால் உங்கள் தங்கையின் ஆசையை நிறைவேற்ற முடியாதுன்னு சொல்றதை தவிர. உங்க நிலைமையை நீங்க தெளிவா சொல்லிட்டிங்க, என் நிலைமையை நேரடியாகவே பார்த்திங்க. உங்க தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கை வரிசையில் நிற்கிறது. ஆனா அவ வாழ்க்கை முடிஞ்சி போன ஒரு கதை.  அதை அப்படியே மாய்க்க நான் தயார் இல்லை.  எனக்கு அவ ரொம்ப முக்கியம்.  அதுக்காக நான் எதையும் செய்வேன்." என்றான் ஜீவன்த். 

கடிவாளம் அணியாத மேகம் Donde viven las historias. Descúbrelo ahora