அத்தியாயம் 35

4.1K 227 30
                                    

சயூரிக்கு வெகு விமர்சையாக வளைகாப்பு நடந்துக்கொண்டிருந்தது. ஜீவன்த் - சயூரி பெற்றோர்கள், உறவினர்கள் எல்லோரும் அங்கே கூடியிருந்தார்கள். பத்து மாதங்களாக பிரிந்திருந்த மகனை பார்த்தவுடன் அனுமித்ரா ஓடி சென்று அவனை அள்ளி அணைத்துக்கொண்டாள். அவனும் 'அம்மா, அம்மா' என்று அவளை நீங்காமல் அவளுடனே இருந்துக்கொள்ள எல்லோருக்கும் நடுவே இருந்தாலும் தனித்து இருப்பதாக உணர்ந்தான் சாய்வேதன்.

அனுமித்ரா அவனை திரும்பியே பார்க்கவில்லை. அவனுக்கும், அவளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாதது போல நடந்துக்கொண்டாள். பார்க்க சிம்பிளாக இருந்தாள். எந்த ஒரு அலங்காரமும் இல்லை. சும்மாவே அப்படித்தான் இருக்க விருப்பப்படுவாள். ஆனால் ஒருத்தனுக்கு மனைவியாக இருந்ததினால் அவனை யாரும் குறை கூற கூடாது என்பதால் லேசாக அலங்கரிந்து கொள்பவள் இன்று அது கூட இல்லாமல் நார்மலாக இருந்தாள். மகனை கையில் பிடித்துக்கொண்டு அங்கேயும் இங்கேயும் சுறுசுறுப்புடன் அலைந்துக்கொண்டு இருந்தாள்.

அவள் போகும் இடமெல்லாம் சாய்வேதனின் பார்வை அவளை பின்தொடர்ந்தது. எல்லோரும் பார்க்கும்படியாகவே தாலி கட்டிய மனைவியை சைட் அடித்தான் அவன். சில நேரம் அவனை முறைத்தும், சில நேரம் அவனை கண்டும் காணாமலும் இருந்தாள் அவள்.

"அண்ணி உங்க அண்ணனை சொல்லி வைங்க. எப்போ பாரு என்னையே பார்த்துட்டு இருக்காரு. கண்ணுல மிளகாய் பொடியை அள்ளி போட்டிடுவேன்." என்றாள் அனுமித்ரா சயூரியிடம்.

"சும்மாதானே பார்த்துட்டு இருக்கான். உங்கிட்ட வந்து பேசவா செய்யுறான். அவன் பொண்டாட்டியை அவன் பார்க்கிறான். அதை என்னால் தடக்க முடியுமா?" என்றாள் அவள்.

"பொல்லாத போண்டா டீ" என்று பல்லை கடித்துவிட்டு போய்விட்டாள் அவள். அவளை வெறும் பார்வையோடு விட்டுவிட்டான் சாய்வேதன். வளைகாப்பு முடிந்து எல்லோரும் கிளம்பிவிட ஆதிக் தாயை பிடித்துக்கொண்டு அழ தொடங்கினான். அனுமித்ரா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவன் அழுதுகொண்டே பிடிவாதம் பிடிக்க அனுமித்ரா செய்வதறியாது நின்றாள். இவனை வைத்தாவது அவள் தன் பிடிவாதத்தை விடுவாள் என்று எல்லோரும் அமைதியாக இருக்க சாய்வேதன் அவர்கள் அருகில் வந்தான்.

கடிவாளம் அணியாத மேகம் Tahanan ng mga kuwento. Tumuklas ngayon