அத்தியாயம் 30

4.2K 227 49
                                    

உலகத்தில் எந்த கணவனும் நினைக்காத ஒரு விஷயத்தை சாய்வேதன் நினைத்துக்கொண்டிருந்தான்.  தன் மகனுடன் ஹாஸ்பிடல் சென்றவன் மரபணு சோதனை செய்துவிட்டு வந்தான் ரகசியமாக. ரிசல்ட் இரண்டு நாட்களுக்கு பிறகுதான் கிடைக்கும் என்ற நிலையில் சாய்வேதனின் மனநிலை மிகவும் மோசமாக சென்றுக்கொண்டிருந்தது.  ஆதிக் தனது குழந்தையாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணமே அவனிடம் மேலோங்கி இருந்தது. 

விசித்திரமானவன்! அனுமித்ரா இப்படி ஒரு நிலையில் இருந்த போது அவளை மனைவியாக ஏற்க தயங்காதவன்! இப்போது அவளது இந்நிலைக்கு தான் காரணமாக இருப்போமோ என்ற ஐயத்தில் இந்த பரிசோதனையை மேற்கொண்டான்.  ஆனால் அவனின் எதிர்பார்ப்போ ஆதிக் இவன் மகனாக இருக்க கூடாது என்பதுதான். 

பெரிய காரணம் ஒன்றும் இல்லை.  ஆதிக் இவன் மகனாக இருந்தால், அதாவது அனுமித்ராவை நாசம் செய்தது இவன்தான் என்றால் இப்போது கிடைத்துக்கொண்டிருக்கும் அவளின் அன்பு இவனுக்கு ஒருபோதும் கிடைக்காது. உண்மை தெரிந்தால் அவள் இவனை வெறுக்காமல் இருக்கலாம் அவன் மேல் அவள் கொண்ட அன்பால்.  ஆனால் கண்டிப்பாக மன்னிக்கமாட்டாள். அவளை அப்படி இழக்க முடியாமல் இவன் மனம் தவித்தது.  ஆதிக் யாருடைய மகனாக இருந்தாலும் எதுவும் மாறிவிடபோவதில்லை. சாய்வேதனின் அன்புக்கும், சொத்துக்கும் அவன்தான் ஏக போக வாரிசு.  எதிர்காலத்தில் இன்னொரு குழந்தை இவனுக்கு பிறந்தாலும் ஆதிக்கின் இடத்தை அந்த குழந்தையால் தட்டிப்பறிக்க முடியாது. பெயர் அளவில் தகப்பனாக இருந்தாலும் இருவருக்கும் இடையே இருக்கும் அன்பின் அளவை அளவிடவே முடியாது.  பெண் குழந்தைகள்தான் தகப்பனின் அதிகமாக ஒட்டுவார்கள் என்று சொல்வார்கள்.  ஆனால் இங்கே தலைகீழ். 

பரிசோதனையில் முடிவு என்னவா இருக்கும்? இவன் ஏன் பரிசோதனை மூலம் ஆதிக்கின் தகப்பனை தேடிகிறான்? அதற்கு காரணம் மூன்று வருடங்களுக்கு முன்பாக அவன் வாழ்க்கையில் கடந்து போன ஒருநாள் இரவுதான்.  தன் மனதில் எழும் ஐயம் உண்மையா இல்லை வெறும் கற்பனையா என்ற சந்தேகத்திலேயே மூன்று வருடத்தை கழித்தான். சந்தேகம் இருந்த போதும் அவனின் தேடல் தடைப்படாமல் போய்க்கொண்டிருக்க மனைவிக்கு கொடுத்த வாக்கிற்காக அதையும் இடையில் விட்டான்.  சந்தேகம் சந்தேகமாகவே போய்விடட்டும் என்று நினைத்திருக்க திடீரென்று  ஒருநாள் இரவு மீண்டும் இவனை கலக்கியது. 

கடிவாளம் அணியாத மேகம் حيث تعيش القصص. اكتشف الآن