அத்தியாயம் 15

4.1K 216 30
                                    

விடிந்த பிறகும் வெகுநேரம் தூங்கிய தன்னை நொந்தப்படி கதவை திறந்த அனுமித்ரா அங்கே நின்றவர்களை காணவும் முகத்தில் சிவப்பு படர லேசாக சிரித்துவைத்தாள்.  இவளை விட பெரிதாக இருந்தது சயூரியின் சிரிப்பு. 

"அண்ணன் எங்கே அனு?" என்று கேட்டாள் சயூரி. 

"தூங்குறாரு அண்ணி.  கொஞ்சம் நேரம் பட்டுவ பார்த்துக்கோங்க, நான் குளிச்சிட்டு ஓடி வந்திடுறேன்." என்றாள் கெஞ்சலாக. 

"அதுக்கு என்ன? நீ போயிட்டு வா.  நான் அண்ணனை எழுப்புறேன்." என்று குழந்தையை அழகம்மாவிடம் இருந்து வாங்கிகொண்டு உள்ளே வந்தாள் சயூரி. 

"வேணாம் அண்ணி, அவர் தூங்கட்டும்.  நைட் லேட்டா தூங்கினாரு." என்று கூறிவிட்டு குளியல் அறையை நோக்கி சென்றவள் நின்று திரும்பி 

"அண்ணி இவரு கூடவே ஒருத்தன் அலைவானே அவன் நடுராத்திரி போன் போட்டு தொல்லை பண்ணுறான்.  அவனை கண்டிச்சு வைங்களேன்." என்றாள். 

"சரி நான் சொல்றேன்.  இனி பண்ணமாட்டான்." என்று உறுதி கொடுத்தாள் சயூரி.  தலையாட்டிக்கொண்டு அனுமித்ரா குளியல் அறைக்குள் நுழைந்துக்கொண்டாள்.  சயூரி குழந்தையை கொஞ்சியப்படி அங்கே இருந்த சோபாவில் இருந்தாள்.  அவள் அண்ணன் நன்றாக தூங்கிகொண்டு இருந்தான். அவனை பார்த்து இவளுக்கு வியப்பாக இருந்தது. 

"இவன் நமக்காக அனுவை திருமணம் செய்து கொண்டானா? இல்லை இவனுக்கு அவள் மீது எதுவும் வந்துவிட்டதா?" என்று தனக்குள் கேட்டுக்கொண்டாள்.  

குளித்துவிட்டு குழந்தையை வாங்கினாள் அனுமித்ரா. 

"சூப்பர் பாஸ்ட்" என்றபடி குழந்தையை கொடுத்தாள் சயூரி. 

"வேற வழி" என்று சிரித்தாள் அனுமித்ரா.  உறங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பாமலேயே இருவரும் வெளியே சென்றார்கள். 

"அண்ணன் ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு வந்து உனக்கு ஏதாச்சும் தொல்லை கொடுத்தானா?" என்று கேட்டாள் சயூரி நடந்துக்கொண்டே.  ஒரு நிமிடம் நிதானித்த அனுமித்ரா 

கடிவாளம் அணியாத மேகம் Donde viven las historias. Descúbrelo ahora