அத்தியாயம் 26

4.2K 219 45
                                    

"பழியாடு போல வசமா வந்து இவனுங்களிடம் வந்து சிக்கி கொண்டாமோ! இவள் என் நினைவிலேயே இல்லை.  இப்போ வந்து இவ இப்படி நிக்குறாளே! இவளுக்காக எத்தனை பேர்? ஒருத்தன் அடிக்கிறான், ஒருத்தன் துப்பாக்கியை காட்டுறான். இவர்கள் இப்படி துடிக்குற அளவுக்கு நான் இவளுக்கு என்ன செய்தேன்? காதலிப்பது போல நடித்தேன், அப்புறம் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் மயக்கமருந்து கலந்து கொடுத்தேன்.  அப்புறம்..." என்று அவன் மனதிற்குள் நடந்ததை படமாக ஓட விட எதிரே நின்றவன் பொறுமை இல்லாமல் பிஸ்டலை அழுத்த போனான். 

"சாய் கொஞ்சம் பொறு.  அவன் பலத்த யோசனையில் இருக்கிறான்.  இவன் இதே வேலையாகவே திரிகிறான் போல.  அவனுக்கு யோசித்து பார்க்க கொஞ்சம் டைம் கொடுக்கலாம்." என்றான் ஜீவன்த். 

ஜீவன்த் அப்படி கூறவும் பிஸ்டலலின் குறியை அகற்றிய சாய்வேதன் போனை எடுத்துக்கொண்டு சற்று தள்ளி போனான்.  அப்புறம் கொஞ்ச நேரம் அங்கே யாரும் பேசவில்லை. செல்வா வாயை திறப்பான் என்று எல்லோரும் எதிர்பார்க்க அவன் விடா கண்டனாக இருந்தான். இவனுகளிடம் இருந்து எப்படி தப்பலாம் என்ற யோசனையில் இருந்தான்.  

சற்று நேரம் கழித்து சாய்வேதன் போனில் சில மெசேஜ் வர அதை பார்த்தவன் மறுபடியும் அவன் முன்னே போய் நின்றான். 

"சார் எனக்கு தெரிந்த கம்பெனியில்தான் வேலை செய்யுரிங்க.  ஆனா அங்கே உனக்கு கிடைக்கும் சம்பளத்தில் நீ வாழும் இந்த ஆடம்பட வாழ்க்கை எப்படி சாத்தியம்! உன் கையில் நீ போட்டிருக்கும் வாட்சே பல லட்சத்தை தொடுமே! அப்புறம் காஸ்ட்லி போன், ஹைக்  கிளாஸ் ட்ரெஸ், அப்புறம் நீ தங்கியிருக்கும் பெரிய வீடு, கார் எல்லாம் நீ பார்க்கும் வேலையில் சாத்தியமில்லை.  நிச்சயமாக நீ வேற ஏதோ அண்டர்கிரவுண்ட் வேலை செய்யுற? அது என்னன்னு நீயே சொல்லுறியா? இல்ல அதையும் நானே சொல்லனுமா? இன்னும் ஒரு பத்து நிமிடம் கொடுத்தா அதை நானே சொல்லிடுவேன், உனக்கு மட்டும் இல்லை இந்த நாட்டு போலீசிடமும். ம் பேசு." என்றான் சாய்வேதன் அமர்த்தலாக.  

கடிவாளம் அணியாத மேகம் Donde viven las historias. Descúbrelo ahora