அத்தியாயம் 33

4K 224 48
                                    

அனுமித்ரா சாய்வேதனை பிரிந்து சென்று ஒருவாரம் ஆகிவிட்டது. அவள் இல்லாமல் தகப்பனும், மகனும் தனியாக சமாளிக்க முயற்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள்.  இன்னும் அது முழுமையாக கைவந்தது போல தெரியவில்லை.  அனுமித்ராவுக்காகத்தான் ஆதிக்கை அழகம்மாவிடம் இரவு இவன் விட்டது.  இப்போது அவருக்கு இரவு வேலை இல்லாமல் போய்விட்டது.  இரவும் மகனை தன்னோடு வைத்துக்கொண்டான் சாய்வேதன். தாயை தேடும் மகனோடு விளையாண்டு, அவனுக்கு கதை சொல்லி தூங்கவைத்து களைத்து போன பிறகும் அவனுக்கு தூக்கம் வராது அவன் மனைவியின் ஸ்பரிசம் இல்லாமல்.  

அவள் இங்கிருந்து சென்ற பிறகு எத்தனையோ முறை போனில் தொடர்புக்கொள்ள முயன்றிருக்கிறான்.  அவள் எடுக்கவேமாட்டாள்.  நம்பரை மாற்றவேண்டும் என்றும் அவள் நினைக்கவில்லை, ப்ளாக் செய்ய வேண்டும் என்றும் நினைக்கவில்லை. ரிங்க் அடித்துக்கொண்டே இருக்கும் அவள் எடுக்கவேமாட்டாள்.  மெசேஜ் போட்டு பார்த்தான்.  ஆரம்பத்தில் அதுவும் கவனிக்கப்படாமல் இருந்து அப்புறம் ப்ளு டிக் மட்டும் விழுத்தது.  பதில் வராது.  அவள்தான் மெசேஜை பார்க்கிறாளா என்ற சந்தேகத்தில் 'சாரி சாரி சாரி' என்று டைப் செய்துவிட்டு சோகமான அத்தனை எம்மொஜியும் போட்டுவிடுவான்.  தினமும் காலையும், மாலையும் அவன் வேலை இதுதான். 

ஜீவன்த் அவளுக்கு இரவோடு இரவாக எந்த ஹாஸ்டலை பார்க்க என்று தேடிக்கொண்டு இருக்கும் போது அதையும் இவன்தான் தேர்வு செய்து அனுப்பினான்.  அதை ஏற்க ஜீவன்த் தயாராக இல்லை.  ஆனால் அனுவுக்கு தெரியாமல் ஜீவன்த்திடம் பேசி அவனை சம்மதிக்கவைத்தாள் சயூரி.  

ஹாஸ்டலை பார்த்தவுடன் "இந்த ஹாஸ்டல் வேண்டாம்.  ரொம்ப காஸ்ட்லியா இருக்கும் போல. உங்களை நான் ரொம்பவும் கஷ்டபடுத்த விரும்பல." என்றாள் அனுமித்ரா.  

"இதுல என்ன கஷ்டம்? இந்த ஹாஸ்டலில் உன்னை தங்க வைக்குற அளவுக்கு எனக்கு வசதி இருக்கு அனு." என்று ஜீவன்த் அழுத்தமாக சொல்ல அவள் ஏற்றுக்கொண்டாள்.  ஆனாலும் அவள் மனதில் எழுந்த சந்தேகத்தை கேட்டுவிட்டே உள்ளே சென்றாள். 

கடிவாளம் அணியாத மேகம் Where stories live. Discover now