அத்தியாயம் 12

3.9K 222 35
                                    

வறண்டு போய் பொட்டல் காடாக இருந்த அவள் இதயத்தில் சிறு துளிர்விட தொடங்கிய செடியை அவள் அதிர்ச்சியுடன் பார்த்தாள். லேசான சிரிப்பு அவள் உதட்டில் வந்து போனது. பிறகு அமைதியாக சாப்பிட்டாள். அவளுக்கு சாப்பாடு என்பது சக்தியை தரக்கூடியது. உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் பெற எதை கொடுத்தாலும் சாப்பிடுவாள் இவள் குழந்தைக்காக. அதனால் எதுவுமே பேசாமல் தனக்கு தேவையான சத்துக்களை சேகரித்துகொண்டிருந்தாள் அவள்.

அவள் அமைதியாக இருப்பதை பார்த்தவன் அவளிடம் வேறு எதுவும் பேசவில்லை. சாப்பிட்டு முடித்து அங்கும் இங்கும் உலாவினாள். மகனுக்கு தேவையான இரவு உணவை கொடுத்துவிட்டு வந்தாள். பிறகு கடனே என்று கட்டிலில் படுத்து கண்ணை மூடிக்கொண்டாள். அவளின் உடலின் ஒவ்வொரு நரம்பும் அவனின் அன்புக்கு ஏங்கியது. அவளுக்கு வியப்பாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருவன் மேல் காதலில் விழுந்த போது கூட இந்தமாதிரியான எண்ணங்கள் அவளுக்கு தோன்றியது இல்லை. அவனை பார்த்தால் ஒரு வண்ணத்து பூச்சி திடீரெண்டு சிறகை விரித்து படபடக்கும். கண்கள் பூமிக்கும் அவன் முகத்துக்கும் இடையே அல்லாடும். ஆனால் அவனிடம் அன்பை தேடாது மனம். ஒருவேளை அப்போது இவள் பெற்றோரிடம் இருந்ததால் கூட இருக்கலாம்.

அடுத்து ஜீவன்த்திடம் இருந்த போதும் இந்தமாதிரி எண்ணம் அவளுக்கு வந்தது இல்லை. கேட்காமலேயே அன்பை தருபவன் அவன். இவளின் முகம் அறிந்து தேவையை பூர்த்திசெய்வான். ஆனால் அவனிடம் கூட இவள் இந்த மாதிரி ஒரு அன்பை தேடியது இல்லை. இவனிடம் ஏன் தேடுகிறது? என்ற சுய ஆராச்சியில் அவள் இருக்கும் போது அவள் நினைவில் வந்தான் அவளது மகன். பட்டென்று எழுந்து அமர்ந்தவள் சாய்வேதனை தேடினாள்.

அவன் போனில் பேசிக்கொண்டு இருந்தான். அவனுக்கு தேவையானதை தயாராக வைக்கும்படி பேசிக்கொண்டிருந்தான் தன் உதவியாளரிடம்.

"வேதும்மா" என்று அழைத்தாள் எட்ட திரும்பி நின்ருந்தவனை.

அவளின் இந்த அழைப்பில் திகைத்து திரும்பியவன், படுத்தவள் எழுந்து அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு "என்னடா?" என்றான்.

கடிவாளம் அணியாத மேகம் Donde viven las historias. Descúbrelo ahora