அத்தியாயம் 34

4.6K 218 47
                                    

பத்து மாதங்களுக்கு மேலாக ஆஸ்திரேலியாவில் போய் இருந்துக்கொண்டு இன்று திடீரெண்டு வந்து எல்லோர் முன்னேயும் முத்தம் கொடுத்துவிட்டு போனவனை நினைத்து அனுமித்ராவின் உள்ளம் கொதித்தது.  

"குடிக்கார பய! முகத்தை காட்டல! என் முகத்தை சரியா கூட பார்க்கல ! அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்போ காலியாகுமுன்னு நாடு விட்டு நாடு  போய் இருந்துக்கொண்டவனுக்கு இப்போ மட்டும் என்ன புதுசா பாயாசம் வந்திருக்கு.  வந்திருக்க பாயாசம் செய்த தப்புக்கு என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு அல்லாவா வந்திருக்கனும்.  அது இல்லாமல் பெரிய ரோமியோ மாதிரி புதுசா காதலில் குதிச்சிருக்கான்.  இவன் தினமும் ஆயிரம் முறை லவ் யூ என்றாலும் அவனை நான் மன்னிப்பேனா?" என்று மனதிற்குள் கணவனை திட்டிக்கொண்டே சயூரி வீட்டுக்கு சென்றாள் அனுமித்ரா.  

அனுமித்ராவை அங்கே காணவும் சயூரிக்கு இந்த அண்ணன் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு போயிருக்கலாமே என்ற எண்ணம் வந்தது.  ஆனால் வந்திருந்தவளோ எமகாதகியாக இருந்தாள்.  தங்கையை பார்க்க கண்டிப்பாக இங்கே அவன் வந்திருப்பான் என்று அவளுக்கு தெரியும்.  ஆனாலும் பார்வையை இங்கேயும், அங்கேயும் அலைபாயவிடாமல் சயூரிடம் பேசிவிட்டு சாய்வேதனுக்கு நாலு டோஸ்விட்டாள்.  

"சரி விடு அனு! ஏதோ தெரியாமல் செய்திருப்பான்.  அந்த வாட்ச்சை காட்டு பார்ப்போம்.  உனக்கு பிடிக்காவிட்டால் என்னிடமே தந்துவிட்டு போ.  நான் அதை பத்திரமா வச்சிக்கிறேன்.  உனக்கு எப்போ பிடிக்கிதோ அப்போ வாங்கிட்டு போ." என்றாள் சயூரி. 

"உங்க அண்ணனுக்கு வாயில் விரலை கொடுத்தாலும் கடிக்க தெரியாது.  சின்ன பப்பா அவரு தெரியாம செய்யுறதுக்கு.  எனக்கு வரும் கோபத்துக்கு அவன் கையில் கிடைச்சான் அப்படியே ஒடிச்சி போட்டுடிடுவேன்." என்றாளே தவிர அந்த வாட்ச்சை சயூரியிடம் காட்டும் எண்ணம் அவளுக்கு இல்லை.  

"நீ அவனை என்னவும் செய்துவிட்டு போ.  உனக்கு இல்லாத உரிமையா? அந்த வாட்ச்சை காட்டேன்.!" என்று சயூரி அதை விடாமல் கேட்க மனமே இல்லாமல் அதை வெளியே எடுத்தாள் அனுமித்ரா.  சயூரி நேரத்தை பார்த்துக்கொண்டு வாட்ச்சை பார்த்தாள்.  இன்னும் இருபது   நிமிடத்தில் எட்டு அடிக்கும்.  அப்போது என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும் என்று நினைத்து அதை கையில் வைத்துக்கொண்டே வேறு பேச்சுக்கு தாவினாள் அவள். 

கடிவாளம் அணியாத மேகம் Where stories live. Discover now