அறிமுக உரை

6.8K 103 23
                                    

அறிமுக உரை

இன்று அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்புகிறான் விக்ரமாதித்யா. அரண்மனை போன்ற அவனது வீடான பொன்னகரம் பரபரப்பாய் காணப்பட்டது. அதன் வேலையாட்கள் பம்பரமாய் சுழன்று கொண்டு இருந்தார்கள்... இல்லை இல்லை, ராணி நந்தினி தேவி அவர்களை அப்படி சுழற்றிக் கொண்டிருந்தார். இன்று அவருடைய பெயரன் அமெரிக்காவிலிருந்து திரும்பி வர போகிறான். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப் பட்டத்தை முடித்துவிட்ட பின், அமெரிக்காவில் தங்களது தொழில் ஸ்தாபனத்தை நிறுவி, இரண்டு ஆண்டுகள் அங்கு பணிபுரிந்து விட்டு,  இன்று அவன் இந்தியா திரும்புகிறான்.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு, இன்று தான் தன் தாய் மண்ணில் கால் வைக்கப் போகிறான் விக்ரமாதித்யா. அந்த பத்து ஆண்டுகளில், அவன் ஒரு முறை கூட இந்தியா வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவனுக்கு விருப்பம் இல்லாததால் அல்ல... ஒரு முக்கியமான காரணத்திற்காக, அவன் இந்தியா வருவதை ராணி நந்தினி தேவி விரும்பவில்லை.

விக்ரமாதித்யாவின் அம்மா ராணி சாவித்திரி தேவி, மகன் திரும்பி வரப் போவதை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்தார். வருடத்திற்கு ஒரு முறை தான் அவர் தன் மகனை பார்க்க அனுமதிக்கப் பட்டிருந்தார். வருடத்திற்கு ஒருமுறை தன் கணவன் விமலாதித்தனுடன் அமெரிக்கா சென்று தன் மகனை சந்தித்துவிட்டு வருவார். அங்கு செல்லும் போதெல்லாம், தன்னை அமெரிக்காவில் தனியாய் இருக்க வைப்பதற்காக அவருடன் ஓயாமல் சண்டையிடுவான் விக்ரமாதித்யா. ஆனால், அதில் சாவித்திரி செய்யக் கூடியது எதுவுமில்லை. மகனின் கோப வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு கண்ணீர் சிந்துவார். இன்று அவருடைய மகன் வரப்போகிறான்.

தன் கையைப் பிசைந்துகொண்டு பதற்றமாக இருந்தார் சாவித்திரி. அவர் என்ன நினைக்கிறார் என்பது நன்றாகவே புரிந்திருந்தது விமலாதித்தனுக்கு.

"எதுக்காக இவ்வளவு பதட்டமா இருக்க?" என்றார் தனக்கு எதுவும் புரியவில்லை என்பது போல்.

உறவாய் வருவாய்...! (முடிந்தது)Where stories live. Discover now