14 வைஷாலியின் அம்மா

1.6K 91 13
                                    

14 வைஷாலியின் அம்மா

விக்ரமை பார்த்த வைஷாலி அங்கிருந்த ஒரு காரின் பின்னால் ஒளிந்து கொண்டாள். சிறிது நேரம் தாமதித்துவிட்டு, அவன் அங்கு இருக்கிறானா என்று மெல்ல எட்டிப் பார்த்தாள். அவன் அங்கு இல்லாமல் போகவே, நிம்மதி பெருமூச்சு விட்டு, வெளியே வந்தாள். அவன் நின்றிருந்த பக்கம் செல்லாமல், வேறு பக்கமாக வெளியே செல்ல நினைத்து திரும்பியவள், விக்ரம் அவளுக்கு முன்னால் வந்து நின்றதை கண்டு அதிர்ச்சியடைந்தாள். அவனை கவனிக்காதவள் போல அவனை கடந்து செல்ல முயன்றாள்.

"நீ இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க?" என்றான்.

"தலைவலி... இருமல்" என்று அவனிடமும் இருமி காட்டினாள்.

"உங்களை மாதிரி மிடில்கிளாஸ் எல்லாம் இங்க வர முடியாதுன்னு சொன்ன?" என்று அவளை மடக்க முயன்றான்.

"இந்த ஹாஸ்பிடல் எப்படித் தான் இருக்குன்னு பார்க்க வந்தேன்" என்று பொய் உரைத்தாள்.

"பொய் சொல்லாத. நான் சொன்னது உண்மையா இல்லையான்னு செக் பண்ண தானே நீங்க வந்த?"

"நீங்க சொன்னதை செக் பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. ஏன்னா, நீங்க சொன்னது எல்லாமே ஹம்பக்னு எனக்கு தெரியும்" என்றாள் அசறாமல்.

"அப்படியா?" என்று சிரித்தான்.

"எதுக்கு சிரிக்கிறீங்க?"

"நீ சொல்ற பொய்யை கேட்டா சிரிக்காம என்ன செய்றது?"

"நான் ஒன்னும் பொய் சொல்லல"

"அப்புறம் என்னை பார்த்து எதுக்கு காருக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்ட?"

"இந்த மாதிரி தேவையில்லாத ஆர்கிவ்மெண்ட்டை தவிர்க்கத் தான்"

அங்கிருந்து செல்ல அவள் முயன்ற போது,

"நில்லு வைஷாலி" தன் கையை நீட்டி அவளை தடுத்தான்.

"இங்க பாருங்க, நீங்க இப்படி எல்லாம் என்கிட்ட நடந்துகிறதை யாராவது பார்த்தா, எங்க அம்மாகிட்ட போய் சொல்லிடுவாங்க. அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டானவங்க தெரியுமா?" என்றாள் பதட்டத்துடன்.

உறவாய் வருவாய்...! (முடிந்தது)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ