24 மீண்டும் நிச்சயம்...
நந்தினியை ஏன் காமினி திட்டினார் என்று ஒன்றும் புரியவில்லை சாவித்ரிக்கு.
"ஏன்டா, காமினி ஆன்ட்டி அம்மா மேல இவ்வளவு கோவபடுறாங்க?" என்றார் குழப்பத்துடன்
அவருக்கு விக்ரம் பதில் கூறும் முன், வைஷாலியிடம் இருந்து அழைப்பு வந்த அதே எண்ணுக்கு போன் செய்தார் நந்தினி.
"ஷ்ஷ்ஷ்...." என்றான் தனது ஆள்காட்டி விரலை உதட்டின் மீது வைத்து.
அந்த அழைப்பை ஏற்றாள் வைஷாலி.
"ஹாய் நந்து பாப்பா..."
"என்னோட ஆதார் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சது?" என்றார் நந்தினி கோவமாக.
"ஹாஹா... என் நம்பரை டிராக் பண்ணிட்ட போலருக்கு...?" என்று அவள் கிண்டலாக கேட்க, அதிர்ச்சியுடன் விக்ரமை பார்த்தார் சாவித்திரி.
நந்தினியும் அசந்து தான் போனார். இந்த பெண் அவர் எதிர்பார்த்ததைவிட ஆபத்தானவளாய் இருக்கிறாள். நடப்பதையெல்லாம் சரியாக கணித்து செயல்படுகிறாள்.
"உனக்கு என்னுடைய ஆதார் நம்பர் எப்படி கிடைச்சிதுன்னு கேட்டேன்"
"நந்தி மா, உன்னை மாதிரி பணக்காரங்க எல்லாம், அல்ப கவுரவத்துக்காக உதவாத வேலையெல்லாம் செய்வீங்க... இந்தியாவை விட்டு வெளியே போகவே போகாத நீ, உன்னுடைய பாஸ்போர்ட்டை ரெனிவல் பண்ற பாரு... அந்த மாதிரி..." என்றாள் நக்கலாக.
இதைப் பற்றி அவளுக்கு எப்படித் தெரியும் என்று புரியாததால், அமைதி காத்தார் நந்தினி.
"உன்னோட பாஸ்போர்ட்டை நீ வாங்குறதுக்கு முன்னாடி, நீ கொடுக்கிற ப்ரூஃப்ஸ் எத்தனை பேரோட கை மாறி போகணும்னு உனக்கு தெரியுமா?"
"அப்படின்னா, நீ பாஸ்போர்ட் ஆபீஸ்ல தான் வேலை செய்யுறியா?"
"உன்னை பத்தின டீடெயில்ஸ்ஸை தெரிஞ்சுக்க, நான் பாஸ்போர்ட் ஆபீஸ்ல தான் வேலை செய்யணும்னு எந்த அவசியமும் இல்ல" என்றாள் தெனாவெட்டாக
ŞİMDİ OKUDUĞUN
உறவாய் வருவாய்...! (முடிந்தது)
Romantizmஅவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்கள...